Seeman on Leo: லியோவுக்கு கட்டுப்பாடுகள்; நிச்சயம் விஜய்க்கு கொடுமைதான் - சீமான் ஆதங்கம்
Seeman Speech: லியோ படத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது நடிகர் விஜய்க்கு கொடுமைதான் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் - விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் லியோ. வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் உருவான இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அதே நாளில் வெளியாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது.
அரசின் கோட்பாடுகள் :
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாவதால் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் ஏற்படாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக தகுந்த பார்க்கிங் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடக்காதவாறு பல கோட்பாடுகளை தமிழக அரசு திரையரங்க உரிமையாளர்களுக்கு விதித்துள்ளது.
சிறப்பு காட்சி :
சீமான் பேச்சு :
லியோ படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள சிறப்பு காட்சிகள் கோட்பாடுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். "கூட்டணி நிறுவனங்கள் வந்ததால் திரைத்துறை தற்போது நலிந்துவிட்டது. திரையரங்கு மொத்தமும் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. இந்த சூழல் முந்தைய காலகட்டத்தை போல 100 நாட்கள் எல்லாம் திரையரங்குகளில் ஓடுவதில்லை. ஒரு வாரத்திற்குள் படத்தை ஓட்டி பெரிய முதலீட்டை போட்டு அதற்குள் வசூலை எடுத்து விட வேண்டும். இதை அதிக காட்சிகளை திரையிடுவது மூலம் தான் எடுக்க முடியும். உலகமே இப்போது கார்ப்பரேட் மையமாக ஆனபிறகு இதை பற்றி பேசி பிரயோஜனம் இல்லை.
நெருக்கடி புதுசா இருக்கே :
அந்த சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது. இது போன்ற நெருக்கடியை வேறு எந்த ஒரு விஜய் படத்திற்கும் கொடுக்கவே இல்லையே. வாரிசு, மாஸ்டர் போன்ற படங்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் எழவில்லை. விஜய்க்கு இது ஒரு கொடுமை தான். ஜெயிலர் படத்திற்கு இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கிப்படவில்லையே. இந்த முறை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். நாங்கள் எதிர்காலத்தில் ஆட்சி செய்யும் போது இது போன்ற பிரச்சினைகளை சீரமைப்போம்" என பேசியிருந்தார் சீமான்.