மேலும் அறிய

Inga Naan Thaan Kingu: விஷால், சிம்புவை வம்பிழுத்த சந்தானம்.. “இங்க நான் தான் கிங்கு” பட ட்ரெய்லர் இதோ!

Inga Naan Thaan Kingu Trailer: சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இங்க நான் தான் கிங்கு

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் திரையரங்கத்திலும் ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் சந்தானம்

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.

'இங்க நான் தான் கிங்கு' (Inga Naan Thaan Kingu) என்ற இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த ஆண்டு வெளியிட்டார். இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மறைந்த மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ், மறைந்த நடிகர் சேஷூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

90ஸ் கிட் ஆக இருக்கும் சந்தானம் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் கிடைக்காமல் படாதபாடுபடுகிறார். ஒருவழியாக பெண் பார்த்து திருமணம் செய்துகொண்டபின் எதிர்பாராத பிரச்னைகள் எல்லாம் அவர் வாழ்க்கையில் வருகின்றன. அந்தப் பிரச்சனை திருமணத்தில் வந்தால் பரவாயில்லை லாஜிக்கே இல்லாமல் எங்கிருந்தோ தீவிரவாதி கும்பல் கதைக்குள் வந்துவிடுகிறது.

இதை எல்லாம் எப்படி ஒரே கதையாக கோர்த்து படமாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். “நடிகர் சங்கம் பில்டிங் கட்டி முடிக்கிற வர கல்யாணம் பண்ணிக்காம இருக்க நான் விஷாலும் இல்ல, சிங்கிளாவே சுத்த சிம்புவும் இல்ல" என்று வசனம் பேசித் தொடங்கும் சந்தானம் சரமாரியாக எல்லாரையும் கலாய்க்கிறார். லாஜிக் இருக்கோ இல்லையோ சந்தானம், முனீஷ் காந்த், தம்பி ராமையா, மறைந்த சேஷூ ஆகியோரின் காமெடி டிராக் நல்ல பொழுபோக்கு படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க : Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
Embed widget