Actor Santhanam: பாடகராக களமிறங்கிய நடிகர் சந்தானம்!
கிக் படத்திற்காக முதன்முறையாக தன் சொந்தக் குரலில் நடிகர் சந்தானம் பாடியுள்ளார்

கிக் படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் பாடினார் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானத்தை காமெடியானாக பார்த்திருப்போம், ஹீரோவாக பார்த்திருப்போம் அவ்வளவு ஏன், அதற்காக இவர் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடியதை கூட பார்த்திருப்போம். இதையெல்லாம் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு முதல் முறையாக பாட்டு பாடி ஆசத்தியுள்ளார் சந்தானம்.
View this post on Instagram
இவர் நடிப்பில் ”கிக்” என்ற படம் திரையரங்குகளில் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி படத்தின் ப்ரொமோ வீடியோ நேற்று வெளியானது. இப்படத்திலிருந்து, வரும் அக்டோபர் 10ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு "சாட்டர்டே இஸ் கம்மிங்கு" (Saturday is cominguu) என்ற முழு பாடல் வெளியாகவிருக்கிறது. இந்த பாடலை நடிகர் சந்தானம் தன் சொந்த குரலில் பாடியுள்ளார்.
படத்தின் ஒரு வரி கதை : நாயகனும் நாயகியும் எலியும் பூனையுமாக அடித்துக்கொள்ளும் ஜாலியான கதைதான் “கிக்”
கிக் படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் : கிக் படத்தில் தாராள பிரபுவின் ஹீரோயின் தான்யா ஹோப், சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். அதுபோக, தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி என பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
View this post on Instagram
படத்தின் இயக்குநர் பற்றிய குட்டி விவரம் : கன்னட சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த ராஜ், முதல் முறையாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.
மேலும் படிக்க : ‛போதும் போதும் லிஸ்டு ரொம்ப பெருசா போது..’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்ப்பட்ட ஆர் ஆர் ஆர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

