Sanam Shetty: என் அக்கவுண்ட்டில் இப்படி செய்ய நீ யார்? எல்லை மீறிய நெட்டிசனுக்கு நடிகை சனம் ஷெட்டி பதிலடி!
Sanam Shetty:தன்னைப் பற்றி தவறாகப் பேசிய நெட்டிசனுக்கு செம பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி.
நடிகை, பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி (Sanam Shetty) -யின் எக்ஸ். தளத்தில் (X) அவரை பற்றி அவதூறாகப் பேசிய நபருக்கு பதலடி தந்துள்ளார்.
சனம் ஷெட்டி பிக்பாஸ் 4-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். சமீப காலமாக பிரபலங்களின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பலருக்கும் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியிடப்படும் என்று மிரட்டலும் சமூக வலைதளங்களில் வந்ததாக பல நடிகைகள் கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர், “டீப் ஃபேக் வீடியோ வெளியிடுவேன்” என சனம் ஷெட்டியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் சனம் ஷெட்டி, “ஒரு தனி நபர் எக்ஸ் பக்கத்தில் என்னுடைய டீப் ஃபேக் வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். இது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காவல்துறையையும் டேக் செய்துள்ளார்.
இது தொடர்பாக பலரும் கமெண்ட் செய்து வந்த நிலையில், நெட்டிசன்களில் ஒருவர் சனம் ஷெட்டி மற்றும் அவரது முன்னாள் காதலர் தர்ஷன் இருவர் குறித்தும் தவறாகவும் எல்லை மீறிய கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் சனம் ஷெட்டியின் தனிப்பட்ட விசயங்கள் முதல் பலவற்றைக் குறித்து மோசமாகப் பேசியிருந்தார். சனம் ஷெட்டி மனநல மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இறுதியாக ‘இதற்கு பெயர் ‘எச்சை’.’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து பதிவிட்ட சனம் ஷெட்டி, “ யார்ரா எச்சை? எதுவும் சொல்ல மாட்டேன்னு என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா? என்னை மென்டல் என்று சொல்வதற்கு எவ்வளவு தைரியம் உனக்கு? ஒருவரின் தனிப்பட்ட விசயங்கள், மனநலன் பற்றி பேசுவது அவ்ளோ சாதரணமாக போச்சா? என் அக்கவுண்ட்ல வந்து வன்முறையாக பேசுவதற்கு நீ யார்? நல்லமுறையில் பேச முடியவில்லை என்றால், எதுவும் சொல்லாமல் இருப்பதே மேல்! உன் செயல் குறித்து புகார் அளிக்கிறேன் “ என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், சனம் ஷெட்டியை பற்றி இவ்வாறு பேசிய நபருக்கு எதிராக பலரும் எக்ஸ், தளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவரின் தனிப்பட்ட வாழ்கை குறித்தும், அவரை பற்றியும் பேசுவது நாகரீகமற்றது என்று பலரும் சனம் ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.