Samantha in hollywood | மார்வெல் தயாரிப்பு.. அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்.. அடுத்த அதிரடியில் சமந்தா..
முன்னதாக சமந்தா ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீப காலமாகவே இந்திய சினிமா நடிகர்கள் உலக சினிமாக்களில் அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர். பெரும்பாலும் பாலிவுட் சினிமா நடிகர்களே ஹாலிவுட் சினிமாக்களில் கால் பதித்து வந்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர்களும் களம் காண தொடங்கியிருக்கிறார்கள். முன்னதாக தனுஷ் ஹாலிவுட் படங்களில் எண்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது சமந்தா அடுத்தடுத்த இரண்டு சர்வதேச புராஜக்டில் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக சமந்தா ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தாவும் தனது சமூக வலைத்தள பக்கங்களின் ஷேர் செய்திருந்தார். இந்த வெப்தொடரை தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஓ பேபி’ என்ற படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
Arrangements of Love’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் சொந்த துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் இருபாலின ஈர்ப்புடைய தமிழ் பெண்ணாக நடிக்கிறார் சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமந்தா தற்போது ஃபேமிலி மேன் வெப் தொடர் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவுடன் இணந்து சிடாடெல்என்னும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியா மற்றும் இத்தாலி என இரண்டு தேசங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள கதை என கூறப்படுகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளார். இந்நிலையில் உலக புகழ்பெற்ற அவஞ்சர்ஸ் என்னும் படத்தின் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் வருகிற 2022 ஆம் ஆண்டு இதனை வெளியிட உள்ளதாகவும் , சிடாடெல் வெப் தொடரை பிரபல மார்வெல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
பிரபல மார்வெல் ஸ்டூடியோ தயாரிப்பில் , அவஞ்சர்ஸ் இயக்குநர்கள் வெளியிடுவதன் மூலம் சிடாடெல் வெப் தொடருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் , சமந்தா மற்றும் வருண் தவான் இருவருக்கும் சிறப்பு பயிற்சிகளை அளிக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளார்களாம்.வருகிற நாட்களின் இது குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல்களை எதிர்பார்க்கலாம்.