Watch Video : yashoda | சமந்தாவுடன் இணைந்த வரலட்சுமி! - என்ன ரோல் தெரியுமா?
டாப்ஸி - சமந்தா எப்படி ஒரே படத்தில் இணைவது அவர்களது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியதோ அதே போல சமந்தாவுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்திருப்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சமீப காலமாக சமந்தா டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறார். அவர் என்ன செய்தாலும் அது ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது. விவாகரத்திற்கு பிறகான சமந்தாவின் வாழ்க்கை அதுகம் உற்றுநோக்கப்படுகிறது என்றுதான் கூற வேண்டும். தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் , அவதூறு பரப்பினாலும் கூட பரவாயில்லை ஆனால் அதனை நாகரீகமான முறையில் சொல்லுங்களேன் என சமீபத்திய நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சமந்தாவும் நடிகை டாப்ஸியும் புதிய படத்திற்காக இணைய இருப்பதாகவும் அந்த நேர்காணலில் ஒப்புக்கொண்டனர். நடிஅகி டாப்ஸி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதையை தயாரிக்கவுள்ளார். அதில் சமந்தா நடிக்கவுள்ளார். அந்த படத்தின் மூலம் நேரடியாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார் சமந்தா. முன்னதாக ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்திருந்தாலும் அது திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. மேலும் சமந்தா ஈழ தமிழ் பெண்ணாக நடித்திருந்தார்.
With your blessings 🙏
— Samantha (@Samanthaprabhu2) December 6, 2021
@SrideviMovieOff @krishnasivalenk
@hareeshnarayan @dirharishankar #Yashoda#YashodaTheMovie pic.twitter.com/OjogcgDvQm
டாப்ஸி - சமந்தா எப்படி ஒரே படத்தில் இணைவது அவர்களது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியதோ அதே போல சமந்தாவுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்திருப்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமந்தா தற்போது ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் யசோதா என்னும் படத்தில் நடித்து வருகிரார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாத தொடக்கத்தில் துவங்கியது. இந்நிலையில் படத்தில் நடிகை வரலட்சுமி மதுபாலா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. சமந்தா படத்தின் டைட்டில் கதாபாத்திரமான யசோதா காதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு வில்லியாகத்தான் வரலட்சுமி களமிறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
Proudly welcoming extremely talented @varusarath5 garu as #Madhubala into the world of #Yashoda
— Pulagam Chinnarayana (@PulagamOfficial) December 15, 2021
A multilingual film ⚡️ing @Samanthaprabhu2 produced by @krishnasivalenk 💥@hareeshnarayan @dirharishankar #MynaaSukumar @SrideviMovieOff @PulagamOfficial #YashodaTheMovie pic.twitter.com/HhRCYogLcu
யசோதா திரைப்படம் மிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. இப்படத்துக்கு மணி ஷர்மா இசையமைக்கிறார்.படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்து வருகிறது. முன்னதாக சமந்தா நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் ஷாகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தற்போது யசோதா படப்பிடிப்பில் இருக்கும் சமந்தா அடுத்ததாக சாந்த ரூபன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் பை-லிங்குவலாக உருவாக உள்ளது. அதுமட்டுமட்டுமல்லாமல் வெப் தொடர் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளாராம் சமந்தா.