Nayanthara Wedding : என்னது? நயன்-விக்கி கல்யாணத்தில் சமந்தா கலந்துக்க மாட்டாங்களா..? காரணம் தெரியுமா?
நாளை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமண நிகழ்ச்சி. நயன்தாராவின் திருமணத்தில் நடிகை சமந்தா கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிய வந்துள்ளது.
நாளை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமண நிகழ்ச்சி. நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்றாக கருதப்படும் இந்தத் திருமண நிகழ்வு கோலாகலமாக அனுசரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு திரைப் பிரபலங்கள் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. எனினும், இவர்களுள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை சமந்தா நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிய வந்துள்ளது.
`காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பின் போது, நெருக்கமான தோழிகளாக சமந்தாவும் நயன்தாராவும் மாறியுள்ளனர். மேலும், நயன்தாராவின் திருமணத்திற்காகப் பெரிதும் மகிழ்ச்சியோடு காத்திருந்தவர் சமந்தா. எனினும் அவரது பணியின் காரணமாக, மிகவும் பிஸியாக `குஷி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகளில் இருப்பதால் அவரால் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்த போதும், தனது பணி காரணமாக அதில் சமந்தாவால் கலந்து கொள்ள முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே கலந்து கொள்ள இருக்கும் நிலையில், சென்னையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்