Salman Khan: பிறந்தநாள் பார்ட்டிக்கு கிளாஸ் உடன் வந்த சல்மான் கான்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
நடிகர் சல்மான் கான் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் சல்மான் கான் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
View this post on Instagram
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அந்திம் படத்திற்கு பின் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் பூஜா ஹெக்டேயுடன் இணைந்து நடித்து வருகிறார்.இதேபோல் கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஷ்மியுடன் அவர் நடித்து வரும் டைகர் 3 படமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சல்மான் கான் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று தனது சகோதரி அர்பிதா கான் வீட்டில் விநாயக சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு விநாயகருக்கு ஆரத்தி எடுக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் முராத் கெடானியின் பிறந்தநாள் விழாவில் அவர் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சல்மான் கானின் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது. காரில் இருந்து இறங்கும் அவர் கையில் ஒரு கண்ணாடி கிளாஸ் உடன் காணப்படுகிறார். பின்னர் அதனை இடது பக்க பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார். அதில் தண்ணீர் போன்ற ஒரு திரவம் காணப்படுகிறது.
View this post on Instagram
இதனைப் பார்த்த பலரும் அந்த கிளாஸில் என்ன இருக்கிறது என குழம்பினர். சிலர் அதனை மதுபான கிளாஸ் என கருத்து தெரிவித்த நிலையில், சில ரசிகர்கள் இதை சல்மானின் புதிய ஸ்டைல் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கிருதி சனோன், அனீஸ் பாஸ்மி, ரவீனா டாண்டன், கார்த்திக் ஆர்யன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.