ரவுடி பேபி சூர்யாவின் ‛அழியாத வடு’: இயக்குனராக சிக்கா அறிமுகம்! மதுரைக்காரர்களுக்கு அழைப்பு!
சிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழ் திரை உலகை நடுங்கச் செய்துள்ளது. படம் பெரிய அளவில் பேசப்படும் என்பதால், திரையங்கு உரிமையாளர்கள் இப்போதே முண்டியடித்து போட்டி போடுகிறார்களாம்.
டிக்டாக் பிரபலங்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் வந்து தன்னுடைய பெர்பாமன்ஸை காட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவர்களும் அட்டேட் ஆக முடிவு செய்துவிட்டார்கள் போலும். இப்போது அவர்கள் குறும்படங்களில் நடிக்கும் தருணம். திருச்சி சாதானாவின் குறும்படம் அசுரி கடந்த விநாயகர் சதூர்த்தி அன்று வெளியான நிலையில் , அவரின் சக போட்டியாளரான ரவுடி பேபி சூர்யாவும் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்தார். அதற்காக யூடியூப் நேரலையில் ரசிகர்களின் கருத்தை கேட்டார் ரவுடி பேபி சூர்யா. கூடவே படத்திற்கான பெயரும் கேட்கப்பட்டது.
150 பேர் தலைப்பு தந்தார்கள் என்கிறார் ரவுடிபேபியின் மனம் கவர்ந்த சிக்கா. அதில் நான்கு தலைப்புகளை சிக்கா-ரவுடிபேபி குழு பரிசீலித்து. அவர்களே பரிசீலித்து இறுதியில் ஒரு தலைப்பை முடிவு செய்ததாகவும் அறிவித்தது. அந்த பெயர் தான் அழியாத வடு. இந்நிலையில் அந்த படத்திற்கு பணியாற்றுவதாக இருந்த இரு யூடியூப்பர்களை யாரோ மிரட்டி விலகச் செய்ததாகவும், இது போன்ற அச்சுறுத்தலுக்கு பயப்படப் போவதில்லை என்றும் சிக்கா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோவில் பேசிய பேச்சு இதோ....
சீப்பை ஒழித்து வைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறார்கள். சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது. கேமரா மேனை மிரட்டினார் படம் எடுப்பதை நிறுத்தி விடுவோமா? இரண்டு பேர் இல்லையென்றால், வேறு ஆளை வைத்து படம் எடுக்க முடியாதா? நீங்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களோ... அவ்வளவு அவ்வளவு எங்களுக்கு சாதகம் தான். எங்களுக்கு ஆதரவு தான் கிடைக்கிறது. ஒரே லைவ்வில் 150 பேர் தலைப்பு சொல்லியிருக்கிறார்கள். அதில் 4 தேர்வு செய்து, அதில் ஒன்றை தேர்வு செய்துவிட்டோம். பட்ட காயங்கள் கூட ஆறும், கெட்ட காயம் ஆறாது. இது தான் படத்தின் மைய கரு. இதில் எல்லா நிகழ்ச்சிகளும் வரும். படத்திற்கு இணை இயக்குனர் தேவைப்படுகிறது. ஒரு கேமரா மேன் தேவைப்படுகிறது. ஒரு உதவி இயக்குனரும் தேவைப்படுகிறது. மற்றபடி படத்திற்கு நான் தான் இயக்குனர். திரைக்கதை, வசனம் ரவுடி பேபி சூர்யா. மதுரையை சுற்றியுள்ள துடிப்பான இளைஞர்கள் என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். சம்பளம் தருவோம். நல்ல தரமான படத்தை எடுத்து வெளியிடுவோம்.’ என்று பேசியுள்ளார்.
சிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழ் திரை உலகை நடுங்கச் செய்துள்ளது. படம் பெரிய அளவில் பேசப்படும் என்பதால், திரையங்கு உரிமையாளர்கள் இப்போதே முண்டியடித்து போட்டி போடுகிறார்களாம். இப்படியெல்லாம் சொல்ல ஆசை தான். என்ன செய்ய, அதற்கும் காலம் வர வேண்டுமே. இயக்குனராக அவதாரம் எடுக்கும் சிக்காவும், திரைக்கதையாசிரியராக அவதாரம் எடுக்கும் ரவுடிபேபி சூர்யாவும் திரை உலகில் கொடிகட்டி பறக்க வாழ்த்துவோம்!