மேலும் அறிய
Advertisement
ஒருவழியா முடிந்த அர்ஜூன்-ரோஜா முதல் இரவு... அனுவின் கடைசி கட்ட முயற்சிகள் முறியடிப்பு!
முதலிரவு முடிந்த கையோடு அர்ஜூனுக்கு அடுத்த அசைன்மெண்ட் வந்துவிட்டது. கலகலப்பாக இருந்த சமயத்தில், சாக்ஷியை பிடிக்க டிசி சந்திரகாந்தt ஒரு டிஸ்கஸ் செய்கிறார்.
ரோஜா சீரியல் ஒருவழியாக 1000 எபிசோடுகளை கடந்து நேற்று 1001 என்கிற மொய் வரிசை எண்ணை எட்டியுள்ளது. அதோ இதோ... என இழுத்தடித்து 3 ஆண்டுகளுக்குப் பின் முதல் இரவுக்கு தயாரான அர்ஜூன்-ரோஜா தம்பதியை பிரிக்க, கடைசி வரை விடாமல் முயற்சி எடுத்த அனுவின் விடாமுயற்சியை பாராட்டுவதா... தலையில் அடித்துக் கொள்வதா என்று தெரியவில்லை.
ஆனால்... ஒரு கல்யாணத்தை கூட இந்த அளவிற்கு நடத்த மாட்டாங்க... அந்த அளவிற்கு அர்ஜூன்-ரோஜா முதலிரவை அவரது குடும்பம் கொண்டாடித் தீர்த்தது. இதுவரை எங்கும் பார்க்காத நடைமுறையாக அது இருந்தது.
வீடெல்லாம் சீரியல் லைட்... எல்லோருக்கும் புத்தாடை... புத்துணர்ச்சி.. சிறப்பு பூஜை... என வேறு ரகம். ஊருக்கு பத்திரிக்கை மட்டும் தான் கொடுக்கவில்லை. ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை விட கோலாகலமாக இருந்தது.
அநேகமாக... இது வரை அந்த நிகழ்ச்சி தயாரிப்பில், அதிகபட்ச செலவு, இந்த முதலிரவுக்கு தான் செலவழித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். முதலிரவு அறையில் உள்ள பேன் ஸ்கூருவை கழற்றியதிலிருந்து முதலிரவை நிறுத்த அனு நடத்திய எத்தனையோ முயற்சிகளை முறியடித்து, ஒரு வழியாக முதலிரவு அறைக்குள் நுழைய அர்ஜூன்-ரோஜா தயாரானார்கள்.
ஏதோ விடுமுறைக்கு வந்த மகன் குடும்பத்தை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதைப் போல, ஒட்டுமொத்த குடும்பமும் முதலிரவு அறைக்கு வழியனுப்ப வருகிறது.
தனது கடைசி அஸ்திரம் ஒன்று பாக்கி இருப்பதாக அனு காத்திருக்கிறார். என்னடா... இது அனு ஒரு பயங்கர பிளானரா இருக்காங்களே.. என்னவா இருக்கும் என நாமும் காத்திருக்க... முதலிரவு அறையின் சாவியை காணவில்லை என ஒட்டுமொத்த குடும்பமும் தவிக்கிறது. அது தான் அனுவின் பிளான்.
முதலிரவு அறை சாவியை எடுத்து மறைத்துவிட்டார். அதனால் முதலிரவு நடக்காது என்பது அவரது பிளான். எவ்வளவு பெரிய மொக்கை பிளான் பார்த்தீங்களா. சரி... வழக்கம் போல அதை அர்ஜூன் முறியடிப்பாரே... அது எப்படி இருக்குமோ... என காத்திருந்தால், அது அதை விட மொக்கை.
வழக்கம் போல... இதெல்லாம் நடக்கும் என முன்பே தெரிந்திருந்த அர்ஜூன், இரண்டு நாட்களுக்கு முன்பே டம்மி சாவி ஒன்றை தயார் செய்து வைத்திருந்தார். ஆக... அனுவின் அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கி... ஒருவழியாக முதலிரவு அறையில் நுழைந்தது அர்ஜூன்-ரோஜா ஜோடி!
அப்புறம் என்ன... அதை அந்த எபிசோடிலேயே சொல்லிவிடுவார்களா? நேற்று 1001 வது எபிசோட் நடந்தது. ஒரு டூயட், அப்புறம் தேய்ந்து போன பரஸ்பர டயலாக் எல்லாம் முடிந்து, இறுதியில் அர்ஜூன்-ரோஜா முதலிரவு கோலாகலமாக, கொண்டாட்டமாக ஒரு வழியாக நடந்து முடிந்தது.
முதலிரவு முடிந்த கையோடு அர்ஜூனுக்கு அடுத்த அசைன்மெண்ட் வந்துவிட்டது. கலகலப்பாக இருந்த சமயத்தில், சாக்ஷியை பிடிக்க டிசி சந்திரகாந்தt ஒரு டிஸ்கஸ் செய்கிறார். முதலிரவு முடிந்த கையோடு, ஹனிமூன் பிளான் போட்டு, அடுத்த டாஸ்க்கை தொடங்கிவிட்டது அர்ஜூன்-ரோஜா தம்பதி.
நல்லவேளை திரபை்படங்களை ரிவியூ பண்ற மாதிரி, சின்னத்திரையை ரிவியூ பண்ணினால், கன்டண்ட் கொட்டிக் கிடக்கும் என்பது மட்டும் உண்மை. ரோஜா... அதற்கு கொஞ்சமும் குறையாத டானிக்!
இதோ அந்த கடைசிய இரு எபிசோட் காட்சிகள்...
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion