மேலும் அறிய

Rohini as Dubbing Artist: ஐஸ்வர்யா ராய் முதல் ஜோதிகா வரை... ஃபேவரட் நடிகைகளின் குரலாக ஒலித்த ரோகினி 

மணிரத்னம் இயக்கிய ஐந்து படங்களில் ஆறு ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்த பெருமை ரோகினியையே சேரும்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று நடிகை, பாடலாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பன்முகம் திறமை கொண்டவராக விளங்குபவர் நடிகை ரோகினி. தனது சிறு வயதிலேயே சினிமா அனுபவம் கிடைத்தாலும் அவர் இந்த இடத்திற்கு வந்ததற்கு மிக முக்கியமான காரணம் அவரின் திறமை மட்டுமே. ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக ரோகினியின் பயணம் தொடங்கியது 1989ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' திரைப்படத்தின் மூலமே. இதுவரையில் மணிரத்னம் இயக்கிய ஐந்து படங்களில் ஆறு ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்த பெருமை ரோகினியையே சேரும். அதுமட்டுமல்ல நம்முடைய ஃபேவரட் ஹரோயின்களாக திரையில் பார்த்த பல ஹீரோயின்களுக்கு பின்னணியில் ஒலித்தது ரோகினியின் ஆளுமையான குரலே. 

 

Rohini as Dubbing Artist: ஐஸ்வர்யா ராய் முதல் ஜோதிகா வரை... ஃபேவரட் நடிகைகளின் குரலாக ஒலித்த ரோகினி 

 

ஐஸ்வர்யா ராய் :

ஐஸ்வர்யா ராய் அறிமுகமான 'இருவர் படத்தில் அவரின் குரலாக நமக்கு ஒலித்தது ரோகினியின் குரல். மிகவும் மென்மையான அந்த குரலுக்கு சொந்தக்காரி. இந்த கூட்டணி அம்சமாக பொருந்தியதால் ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் மற்றும் குரு என இரு படங்களுக்குமே டப்பிங் பேசியதும் ரோகினி தான். இராவணன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மிகவும் உருக்கமாக கத்தி பேசியிருந்தார். ஹீரோயின்களின் உணர்வுகளுக்கேற்ப டப்பிங் பேசி அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியானவர் ரோகினி. 

மனிஷா கொய்ராலா : 

பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா தமிழ்  சினிமாவில் 'பம்பாய்' படம் மூலம் அறிமுகமானார். ஒரு அறியாத பெண் காதலனுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் அவளின் உணர்வை மிக அழகாக தளும்பும் குரலால் வெளிப்படுத்தியிருந்தார் ரோகினி. இந்தியன் படத்திலும் மனிஷாவிற்கு குரல் கொடுத்து ரோகினி தான். நீண்ட பிரேக் எடுத்துக் கொண்ட பிறகு 'மாப்பிள்ளை' படத்தில் தனுஷ் மாமியாராக மிகவும் கெத்தான பணக்கார அதிகாரம் கொண்ட குரலாகவும் ஒலித்தார். 

ஜோதிகா : 

வேட்டையாடு விளையாடு படத்தில் ஆராதனாவின் குரலாக ஒலித்தது ரோகினியின் குரல். ஜோதிகாவின் எக்ஸ்பிரஷனுக்கு ஏற்ற வகையில் ஈடுகொடுத்து பேசியது பாராட்டுக்களை குவித்தது. மேலும் பேரழகன் படத்தில் ஜோதிகாவிற்கு டப்பிங் பேசியதும் இவரே. நடிகைகளின் குணாதிசயம், கதாபத்திரத்தின் பல்ஸ் அனைத்தையும் நன்கு ஸ்டடி செய்து அதற்கு ஏற்றவாறு அந்த உணர்வை குரலில் கொண்டு வருவதில் கைதேர்ந்தவர் ரோகினி.

 

Rohini as Dubbing Artist: ஐஸ்வர்யா ராய் முதல் ஜோதிகா வரை... ஃபேவரட் நடிகைகளின் குரலாக ஒலித்த ரோகினி 

 

ரோஜா :

நடிகை ரோஜாவின் அறிமுக படமான செம்பருத்தி திரைப்படத்தில் ரோஜாவின் சாந்தமான குணாதிசயம் கொண்ட கேரக்டருக்கேற்ப வாய்ஸ் கொடுத்து இருந்தார் ரோகினி.

மதுபாலா : 

ஜென்டில்மேன் படத்தில் ஐயர் ஆத்து மாமியாக நடித்த மதுபாலாவின் கொஞ்சும் குரலாக ஒலித்ததும் ரோகினியின் வாய்ஸ் தான். படத்தின் தொடக்கத்தில் துறுதுறுவென பேசும் போதும் அர்ஜுன் பற்றின உண்மை தெரிந்த பிறகு அதிர்ச்சியில் அவர் பேசும் போதும் வித்தியாசம் காட்டியிருந்தார் ரோகினி.

மேலும் ஐஸ்வர்யா, வினிதா, நக்மா,ரம்பா, ரஞ்சிதா, ஷில்பா ஷெட்டி, அமலா, பூஜா பட் என பல நடிகைகளுக்கும் ரோகினி டப்பிங் பேசி அசத்தியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget