MCU Iron Man: “நான் ரெடிதான்” - மீண்டும் அயர்ன் மேன்.. ஓகே சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர் - ரசிகர்கள் ஹேப்பி
MCU Iron Man: அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க அழைத்தால், மகிழ்ச்சியாக வருவேன் என ராபர்ட் டவுனி ஜுனியர் தெரிவித்துள்ளார்.
MCU Iron Man: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் சீக்ரெட் வார்ஸ் படத்தில், அயர்ன்மேன் கதாபாத்திரம் இடம்பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த அயர்ன்மேன்:
அதீத சக்திகளை கொண்டு உலகிற்கு வரும் ஆபத்துகளை தடுக்கும், சூப்பர் ஹீரோக்களை மையமாக கொண்டு மார்வெல் நிறுவனம் ஒரு பிரமாண்டமான சினிமாடிக் யூனிவெர்ஸை கட்டமைத்துள்ளது. இதன் தொடக்கமாகவும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கதாபாத்திரமாகவும் இருந்தது அயர்ன் மேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜுனியர் அயர்ன் - மேன் ஆகவே வாழ்ந்து நடிகர்களை கவர்ந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களால் திரையில் கொண்டாடப்பட்ட அந்த கதாபாத்திரம், கடந்த 2019ம் ஆண்டு வெளியான எண்ட் கேம் திரைப்படத்தில் உலகை காக்க உயிர் தியாகம் செய்தது. இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து, மார்வெல் படங்களில் அயர்ன்மேன் கதாபாத்திரம் வருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
”ஒகே” சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர்:
இந்நிலையில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த ராபர்ட் டவுனி ஜுனியரிடம், மீண்டும் அயர்ன் மேன் கதபாத்திரத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில், “மகிழ்ச்சியாக வருவேன். அயர்ன்மேன் கதாபாத்திரம் என் டிஎன்ஏவின் மிகவும் ஒருங்கிணைந்த பகுதியாகும். அந்த வேடம் என்னைத் தேர்ந்தெடுத்தது, நான் எப்போதும் சொல்கிறேன், மார்வெல் நிறுவன இயக்குனர் கெவின் ஃபேகிக்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம் . இது ஒரு தோல்வி பந்தயம். அவர் தான் வீடு. அவர் எப்போதும் வெற்றி பெறுவார்” என்று ராபர் டவுனி ஜுனியர் தெரிவித்தார்.
அதோடு, கடந்த 2018ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தான், மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் ஒட்டுமொத்த முக்கிய கதாபாத்திரங்களையும் கடைசியாக ஒரே நேரத்தில் பார்த்தேன். அது மிகவும் முக்கியமான இரவு அதை என்றும் மறக்கமாட்டேன்” என ராபர் டவுனி ஜுனியர் கூறினார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
எண்ட் கேம் படத்தை விட இரண்டு மடங்கு பிரமாண்டமாக, அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் படத்தை தயாரிக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த பொருட்செலவுக்கு நிகரான வருவாயை ஈட்ட, அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க ராபர்ட் டவுனி ஜுனியர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கெவின் ஃபேகி சொல்வது என்ன?
அயர்ன்மேன் கதாபாத்திரத்தை திரும்ப கொண்டு வருவது தொடர்பாக கடந்த ஆண்டு கெவின் ஃபேகியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நாங்கள் அந்த தருணத்தை [டோனி ஸ்டார்க்கின் மரணத்தை] அப்படியே வைத்திருக்கப் போகிறோம், அந்த தருணத்தை மீண்டும் தொடமாட்டோம், அதை அடைய நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்தோம். அதை எந்த வகையிலும் வீணாக்க நாங்கள் விரும்பவில்லை” என கெவின் ஃபேகி தெரிவித்தார். இதனால், அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர் மீண்டும் தோன்றுவாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.