மேலும் அறிய

Spotify original வழங்கும் “நாலணா முறுக்கு” : ஆர்.ஜே பாலாஜியின் புதிய போட்காஸ்ட்..!

இன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக்கூடிய, ஒரு அழகான Podcast ஐ R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.

சென்னை 2021 ஜூன் 21 : டிஜிட்டல் உலகில் வாழும், இன்றைய தலைமுறையினரிடம் Podcast எனும் ஒலி வழியான நிகழ்ச்சிகள், மிக பிரபலமானதாக இருக்கிறது. இளைஞர்களின் உலகை ஆக்கிரமித்திருக்கும் Podcast உலகத்திற்குள மிக பெரிய அளவில், இன்றைய நவீன விசயங்களை,  உள்ளூர் அறிஞர்களுடன் கலந்துரையாடும் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, Spotify original நிறுவனம் “நாலணா முறுக்கு” - R.J.பாலாஜி  Podcast என்ற பெயரில் வழங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, ரேடியோ ஜாக்கி, நடிகர், காமெடியன், இயக்குநர், வர்ணனையாளர் மற்றும் சமூக ஆர்வலர் பாலாஜி பட்டுராஜ் எனும் R.J.பாலாஜி  தொகுத்து வழங்குகிறார். வாராவாரம் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சி இன்று முதல் துவங்கவுள்ளது. 

பன்முக திறமைகள் மூலம் இளைஞர்களிடம் மிகப்பெரும் பிரபல்யத்தை பெற்றிருக்கும் R.J.பாலாஜி அவர்கள், தனது பிரத்யேகாமான அசத்தும் பேச்சு திறமையால், புதுவகையில் இந்நிகழ்ச்சியை வழங்குகிறார். இன்றைய நவீன உலகில் இந்தியா எதிர்கொள்ளும்,  பொது பிரச்சனைகள் குறித்து,  அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் உரையாடி, அவர்களின் பார்வைகளை, அனுபவங்களை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளவுள்ளார். 


Spotify original வழங்கும் “நாலணா முறுக்கு” : ஆர்.ஜே பாலாஜியின் புதிய போட்காஸ்ட்..!

இது குறித்து RJ பாலாஜி கூறும்போது..
 
Spotify original நிறுவனத்துடன் இப்படியொரு அழகான நிகழ்ச்சியில், இணைந்து பணியாற்றுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எனது பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக, புதிதானதை  கற்றுக்கொள்ள,  எனக்கொரு வழிகாட்டியாக இருக்குமென நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி இன்றைய இந்தியாவின் பொது பிரச்சனைகளை, முக்கியமாக இணையத்தில் தவறான வகையில் பரப்பப்படும் பொய்யான கருத்துக்களில்,  ரசிகர்களுக்கு  சரியான விழிப்புணர்வை  எடுத்துரைப்பதாக இருக்கும். எந்தவித பொறுப்பும் இல்லாமல், எல்லாம் கொட்டிகிடக்கும் டிஜிட்டல் உலகில், இந்நிகழ்ச்சி இன்றைய அதிமுக்கிய பிரச்சனைகளில் மிகப்பொறுப்புடன்,  நகைச்சுவை கலந்து,  ரசிகர்களை ஒரு அற்புத பயணத்திற்கு அழைத்து செல்லும். 

Spotify original நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாவது..

ஆங்கிலமல்லாத, உள்ளூர் மொழியிலான Podcast நிகழ்ச்சிகள், இந்தியாவில் தற்போது மிக பிரபலமாகி வருகிறது. வீடியோ திரை இல்லாமல், உலகில் தன்னை இணைத்து கொள்ள விரும்பும் இளைய தலைமுறைக்கு, இம்மாதிரியான Podcast நிகழ்ச்சிகள், ஒரு அற்புதமான உயர்வகை அனுபவத்தை வழங்குகிறது. தமிழில் பெரிய அளவில் இந்தத்துறை வளர்ந்து வரும் நிலையில், இளைய தலைமுறையினரிடம் மிக பிரபலமான ரேடியோ ஜாக்கியாக வலம்வரும், திறமையாளர் RJ பாலாஜி அவர்களுடன், எங்கள் நிறுவனம் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்குவது மகிழ்ச்சி. உள்ளூர் விசயங்களில், புதிய வகையிலான கோணத்தை, கலாச்சாரத்தின் தன்மையை, ரசிகர்கள் விரும்பும் வகையில், வெளிப்படுத்தும் வகையில், தமிழில் தரமான ஒரு நிகழ்ச்சியாக, இந்நிகழ்ச்சி இருக்கும்.  


Spotify original வழங்கும் “நாலணா முறுக்கு” : ஆர்.ஜே பாலாஜியின் புதிய போட்காஸ்ட்..!

Thalapathy 65 First Poster | துப்பாக்கியில் இருந்து சீறும் புல்லட் - தளபதி 65 படக்குழு வெளியிட்ட வீடியோ!

மிக வேகமாக வளர்ந்து வரும் Podcast உலகில், நிகழ்ச்சி தயாரிப்பாளர், ரசிகர்கள் என இருவரின் புள்ளியிலும் தரமான வகையில்,  ரசிகர்கள் விரும்பி கேட்கும், Amit Tandon வழங்கும் Andar Ki Baat, Crime Kahaniyan, Dr. Phobia வழங்கும்  Darr Ka Raaz மற்றும் Shuddh Desi Gay, மேலும் பலர் வழங்கும் 36 ஒரிஜினல் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை Spotify original வழங்கி வருகிறது. ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் 2.6 மில்லியன்  podcast தலைப்புகளை, Spotify உலகம் முழுதும் வழங்கி வருகிறது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Embed widget