Vikram Vedha : விக்ரம் வேதாவை சுற்றும் தகவல்கள்.. ஹ்ரித்திக் ரோஷன் கட்டாயப்படுத்தினாரா? ரிலையன்ஸ் கொடுத்த விளக்கம்..
தங்கள் படங்களில் நடிப்பவர்கள் வழக்கமாக முடிவுகளை எடுப்பதில்லை எனக் கூறியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், `கலைஞர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றாலும், தயாரிப்பு, பட்ஜெட் முதலானவை எங்களின் முடிவு’ என கூறியுள்ளது.
`விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் அதன் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் உத்தரப் பிரதேசத்தைப் போன்ற செட் ஒன்றை அரபு எமிரேட்ஸ் நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும், அதனால் படத்தின் பட்ஜெட் இரண்டு மடங்கானது எனவும் வெளிவந்த தகவல்களை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் `விக்ரம் வேதா’ இந்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்.
`விக்ரம் வேதா’ படத்தின் இந்தி வெர்ஷனைத் தயாரித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. திரைப்பட விமர்சகர் தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்று வந்தாலும், வெளிவந்திருக்கும் தகவல்கள் தவறாக இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனம், `விக்ரம் வேதா படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்து தவறாக வழிநடத்தும், போலியான தகவல்கள் பலவற்றைக் கண்டுள்ளோம். விக்ரம் வேதா படத்திற்காக லக்னோ முதலான இந்திய நகரங்களில் பெரும்பாலான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் இத்தனை பெரிய படக்குழுவினரை அனுமதித்த ஒரே லோகேஷனாக அபுதாபி இருந்ததால் அங்கு செட் உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது’ எனக் கூறியுள்ளது.
HRITHIK - SAIF - ‘VIKRAM VEDHA’: RELIANCE ISSUES IMPORTANT CLARIFICATION… #VikramVedha #HrithikRoshan #SaifAliKhan #RelianceEntertainment pic.twitter.com/AqSr3QZGKq
— taran adarsh (@taran_adarsh) July 4, 2022
தொடர்ந்து, `உடல்நலம் மற்றும் விதிமுறைகளின் காரணமாக அவ்வாறு தேர்வு செய்தோம். இந்த உண்மையை மாற்ற முயல்வது தவறானது’ எனவும் கூறப்பட்டுள்ளது. தங்கள் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர்கள் வழக்கமாக அத்தகைய முடிவுகளை எடுப்பதில்லை எனக் கூறியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், `கலைஞர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றாலும், தயாரிப்பு, பட்ஜெட் முதலானவை எங்களின் முடிவு தான்’ எனவும் கூறியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, மாதவன் - விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவான தமிழ்த் திரைப்படமான `விக்ரம் வேதா’ இந்தியில் சைஃப் அலி கான் - ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரி கூட்டணியே இந்தியிலும் இந்தப் படத்தை இயக்கி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்