Regina Cassandra: நடிக்க வந்த 20 வயதில்... 3 முறை அப்படி கேட்டார்! அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் பற்றி உடைத்து பேசிய ஹீரோயின்!
அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகை ரெஜினா கஸாண்ட்ரா சினிமாவில் தான் எதிர்கொண்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் மூலமாக பிரபலமானவர் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. இந்த படத்திற்கு பிறகு ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, சக்ரா என்று பல படங்களில் நடித்துள்ளார்.
இதில், சக்ரா படத்தின் வில்லியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். இதன் காரணமாக அஜித் நடிப்பில் பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த 'விடாமுயற்சி' படத்தில் அர்ஜூன் உடன் இணைந்து வில்லியாக நடித்திருந்தார்.
ஆனால், இந்தப் படம் பெரியளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. என்றாலும் கூட அஜித் படத்தில் நடித்த நிலையில் ரெஜினாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிளாஷ்பேக், பார்ட்டி போன்று படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக நடிகைகள் தாங்கள் சினிமாவில் எதிர்கொண்டு வரும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக பேசி வரும் நிலையில் ரெஜினா கஸாண்ட்ராவும் அதைப் பற்றி பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் நடிக்க வந்த போது ஒருவர் எனக்கு போன் போட்டு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வீர்களா என்று கேட்டார்கள். அதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. அவர் 3 முறை திரும்ப திரும்ப கேட்டார். அப்போது தான் எனக்கு புரிந்தது. அதன் பிறகு நான் அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனை கட் செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து பேசும் போது, நான் சினிமாவில் நடிக்க வந்த புதிது. என் வயது ஒரு 20 இருக்கும். நான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது கூட ஷாப்பிங் சென்ற இடத்தில் ஒருவர் என்னுடைய உதட்டை பிடித்து கிள்ளிவிட்டார்.
ஆகையால், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் கடந்து தான் பெண்கள் இப்போது வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் பெண்கள் அமைதியாக அதனை கடந்து விடுகிறார்கள். வட இந்தியாவில் அப்படியிருக்க முடியாது. அவர்கள் உடனே முடியாது என்று பதில் அளித்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

