மேலும் அறிய

Karan Johar : ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் கரண் ஜோகர் ஏன் கலந்துகொள்ளவில்லை..இதுதான் காரணம்.

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் கரண் ஜோகர் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்சில் கரண் ஜோகர் கலந்துகொள்ளாததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

ஆனந்த் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின்   தலைவர் முகேஷ்   நீடா அம்பானி தம்பதியின்  இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றன. ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கும் வகையில் இந்த திருமண நிகழ்வில் சர்வதேச பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். பாடகி ரிஹானா ,  பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க்,  கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் , ப்ராவோ மற்றும் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் , ஷாருக் கான் , சல்மான் கான் , அமீர் கான், ரன்வீர் சிங் , ரன்பீர் கபூர் உள்ளிட்ட நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். நடிகைகள் தீபிகா படூகோன், கத்ரீனா கைஃப், கரீனா கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகைகள் இந்த நிகழ்ச்சிக்கு வருகைத் தந்தார்கள். 

கரண் ஜோகர் ஏன் வரவில்லை

ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கரண் ஜோகர் கலந்துகொள்ளாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியம் ஏற்படுத்தியது. பொதுவாக எந்த ஒரு திருமண நிகழ்ச்சி என்றாலும் அங்கு முதலில் வந்து சேர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பெறுபவர் கரண் ஜோகராக தான் இருப்பார். இப்படியான நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்தது அவருக்கு அழைப்பு விடுக்கப் படவில்லையா? தனிப்பட்ட காரணம் ஏதும் இதற்கு பின் இருக்கிறதா? என பல விதமான சர்ச்சைகளை ஏற்படுத்தியது . இந்நிலையில் கரண் ஜோகர் இந்த நிகழ்வுக்கு வராததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

இதுதான் காரணம்

கரண் ஜோகருக்கு இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்திருந்ததாகவும் தனது நண்பர் மற்றும் பேஷன் டிசைனரான மனிஷ் மல்ஹோத்ராவுடன் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில்  பிரபல பாலிவுட் பாடல் ஒன்றுக்கு இருவரும் நடனமாடவும் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் கரண் ஜோகருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டதால் அவரால் தன்னுடைய எல்லா திட்டங்களையும் கைவிட வேண்டியதாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் நடனமாட திட்டமிட்டிருந்த பாடலை மனீஷ் மல்ஹோத்ரா பிரபல பாலிவுட் நடிகைகள் ஜான்வி கபூர், குஷி கபூர் , சாரா அலிகான் , அனன்யா பாண்டே ஆகியவர்களுடன் சேர்ந்து ஆடினார்.

மேலும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவுக்கு கரண் ஜோகர் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தனது உடல்நிலை குணமடைந்ததும் இருவரையும் நேரில் வந்து சந்திப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget