திருமண தேதியை அறிவிப்பாரா ரவி மோகன்? அதிரடியாக போட்ட சஸ்பென்ஸ் பதிவு!
நாளை மே 23 ஆம் தேதி ரவி மோகன் மிக பெரிய விஷயம் ஒன்றை அறிவிக்க இருப்பதாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அது அவரது திருமண தேதியாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் அதிகமாக பேசப்படுவது ரவி மோகனைப் பற்றி தான். நாளுக்கு நாள் அவரைப் பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. மனைவியை பிரிவதாக அறிவித்த ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். சமரச பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்ட நிலையில், ஆர்த்தி சேர்ந்து வாழ்வதற்க்கு தயாராக இருந்த போதிலும், ரவி மோகன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்கிற முடிவில் தீர்க்கமாக உள்ளார்.
இந்த நிலையில் தான், ஆர்த்தி தரப்பு விவாகரத்துக்கு சம்மதம் என்பதை தெரிவிக்கும் விதமாக மாதம் தோறும் ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் வேண்டும் என கூடி மனுதாக்கல் செய்திருந்தார். ரவி தரப்பில் இருந்தும், ஆர்த்தி சேர்ந்து வாழ வேண்டும் என தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், இது தொடர்பான விசாரணை வரும் ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ரவி மோகன் நாளை மே 23 ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இது அவரது திருமணம் தொடர்பான அறிவிப்பாகவோ அல்லது கிரிக்கெட் தொடர்பான அறிவிப்பா என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
காரணம் என்னவென்றால் அவர் டீசர்ட் அணிந்து கொண்டு பந்து வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அதோடு ஸ்ட்ரீட்ஸ் வில் ரிமெம்பர் என்ற பக்கத்தை டேக் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி பிரிவிற்கு கெனிஷா தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அவருக்கும் ரவி மோகனுக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் தான் காரணமாக சொல்லப்படுகிறது.





















