Ravana Kottam Movie: சாந்தனு பாக்கியராஜ் - விக்ரம் சுகுமாறன் கூட்டணி... இன்று வெளியாகும் இராவண கோட்டம்!
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சாந்தனு பாக்கியாராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி,சஞ்சீவ் சரவணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாறன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் இராவண கோட்டம்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சாந்தனு பாக்கியாராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி,சஞ்சீவ் சரவணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கண்ணன் ரவி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
தென் தமிழக கிராமம் ஒன்றில் மேலத் தெரு, கீழத் தெருவில் வசிக்கும் இரு வேறு சமூகத்தினரை ஒற்றுமையாக ஊர் தலைவர்களான பிரபுவும் இளவரசுவும் வழிநடத்துகின்றனர்.
தொடர்ந்து பிரபுவின் எதிர்பாராத இறப்பால், இரு சமூகத்திடையே ஏற்படும் கலவரம் ,அரசியல் ஆதாயத்தால் தூண்டப்படும் சண்டைகள், காதல், வன்மம், சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்தது.
இந்நிலையில், யூடியூபில் இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளியது. நாளை மே 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், சாதிய மோதல்களை தூண்டும் விதமாக உள்ளதாகவும், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாடார் சங்கம் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாரளிக்கப்பட்டது.
நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேசு நாடார் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் வழங்கப்பட்டுள்ள புகாரில், ”பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை சீமை கருவேல மரம் அரசியல், முதுகுளத்தூர் கலவரம் தொடர்பான காட்சிகளை மையப்படுத்தி தவறாக சித்தரிக்க முயலும் விரைவில் வெளிவர உள்ள இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதோடு, தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சாதி வன்மத்துடன் எடுக்கப்பட்டுள்ள இராவண கோட்டம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்' எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் மதயானைக்கூட்டத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மீதும் வைக்கப்பட்ட நிலையில், இந்தப் படம் இன்று வெளியாகிறது. சாந்தனு தனக்கான இடத்தைப் பிடிக்க பல காலமாக முயற்சித்து வரும் நிலையில், தன் வழக்கமான வேடங்களில் இருந்த் வேறுபட்ட கிராமியக் கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்துள்ளார். இப்படம் அவருக்கு கைக்கொடுக்குமா இல்லையா என்பதை நாளை பார்க்கலாம்!