(Source: ECI/ABP News/ABP Majha)
Rashmika Mandanna: படப்பிடிப்பில் அதிக பொறுமை..கோபத்தின் உச்சிக்கு சென்ற அம்மா..பேட்டியில் போட்டுடைத்த ராஷ்மிகா!
என்னுடைய அம்மா எனது இந்த இயல்பை பார்த்து கோபமடைவார். எனது அம்மா மட்டும் இல்லை, எனது குழுவினரும் சில நேரங்களில் தவறுகளை என்னை சுட்டிக்காட்ட சொல்லி கூறுவர்.
தென்னிந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த சீதாராமம், குட்பாய் ஆகிய திரைப்படங்கள் வேற லெவல் ஹிட் அடித்தன.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் எவ்வாறு தனது கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பது குறித்து ராஷ்மிகா பேசி உள்ளார். மேலும், அவ்வளவு எளிதாக அவருக்கு கோபம் வராது என்றும் கூறியுள்ளார்.
நடிகை ராஷ்மிகா இது பற்றி கூறுகையில், ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது, தவறுகள் நடப்பது என்பது மிகவும் இயல்பான ஒன்று. அதனால் நான் மிகவும் சாந்தமாக இருக்க வேண்டும், எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது பொறுமையை இழக்கக்கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். நான் மிகவும் பொறுமை குணம் படைத்தவள்.
படப்பிடிப்பின் போது பல விஷயங்களை ஒருங்குபடுத்த வேண்டி இருக்கும். நிறைய தவறுகள் நடக்கும். ஆனால் நான் எரிச்சல் அடைய மாட்டேன். என்னுடைய அம்மா எனது இந்த இயல்பை பார்த்து கோபமடைவார். மேலும் நான் பேச ஆரம்பிக்கும் நேரம் இது என்று கூட கூறுவார். எனது அம்மா மட்டும் இல்லை எனது குழுவினரும் சில நேரங்களில் தவறுகளை என்னை சுட்டிக்காட்ட சொல்லி கூறுவர்.
View this post on Instagram
ஆனால், படப்பிடிப்பின் போது எங்கேயாவது ஏதேனும் தவறுகள் நடந்தால் நான் அதை சுட்டிக்காட்டி புகார் செய்வதில்லை. ஆனால் எனது குழு உறுப்பினர்கள் இதை நான் கவனிக்க தொடங்க வேண்டும் என என்னிடம் கூறுகிறார்கள். மேலும் அவர்கள் என்னிடம் உங்களுக்கு பொறுமை உள்ளது; ஆனால் எங்களுக்கு இல்லை என்று கூறுவர். அதற்கு நான், "அப்போ நீங்கள் போய் புகார் அளியுங்கள். நான் எனது பொறுமையை என்றும் இழக்க மாட்டேன்" என்று கூறுவேன்.
இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், அனைவரும் மிக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இது அவ்வளவு எளிதான வேலை அல்ல. பிறகு எப்படி நான் அவர்களுக்கு எதிராக செயல்பட முடியும். மேலும் இது அவர்களின் தனிப்பட்ட குற்றமும் அல்ல. நான் என் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, பக்குவமாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் நடந்து கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.