”சினிமாவில் போதுமான அளவுக்கு புரட்சி பேசியாச்சு... இனி இதை படமாக்குவோம்” - இயக்குநர் பா.ரஞ்சித்
”எல்லாருக்கும் தெரியும் ரஞ்சித் வந்த பிறகுதான் தமிழ் சினிமா ஜாதியாக மாறிவிட்டது. அதற்கு முன்பு வரைக்கும் தமிழ் சினிமாவுல ஜாதினா என்னவென்றே தெரியாது பாவம்.”
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படுபவர் பா.ரஞ்சித். இவர் எடுத்த அத்தனை படங்களுமே விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் , அதற்கு பின்னால் இருக்கும் சாதிய அரசியலையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. பா. ரஞ்சித்தின் வருகைக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் சாதிய திரைப்படங்கள் தலைத்தூக்க ஆரமித்துவிட்டன என்ற விமர்சனங்களும் உண்டு. இதற்கு சமீத்திய நிகழ்ச்சி ஒன்றில் சர்காஸமாக விளக்கம் அளித்திருக்கிறார் ரஞ்சித்.
View this post on Instagram
அவர் பேசியதாவது :
”எல்லாருக்கும் தெரியும் ரஞ்சித் வந்த பிறகுதான் தமிழ் சினிமா ஜாதியாக மாறிவிட்டது.அதற்கு முன்பு வரைக்கும் தமிழ் சினிமாவுல ஜாதினா என்னவென்றே தெரியாது பாவம். நாம வெளியே வரும் பொழுது வீட்டில் இருப்பவர்கள் என்ன சொல்லுவார்கள், நாம யார் என்பதை வெளியில் சொல்லாதீர்கள் என்பார்கள். காரணம் நம்முடைய சாதி. ஆனால் என்னுடைய பெற்றோர்கள் ஆரம்பத்தில் இருந்தே , வெளிப்படையாக இருந்தார்கள் . பள்ளி , கல்லூரி என எங்குமே என்னுடைய சாதியை நான் மறைக்கவே இல்லை. கல்லூரி முதலாம் ஆண்டிலேயே சாதியை எதிர்த்து சண்டையிட ஆரமித்துவிட்டேன். சினிமாவிற்கு வந்த பிறகு இதை பற்றியெல்லாம் பேசாதே என்றார்கள். ஆனால் நான் இதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன்.நான் இதன் மூலம் பணம் சம்பாதிப்பேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. நாம நினைக்குறதை பண்ணுவோம். வெற்றியடையவில்லை என்றால் , படம் வரைய சென்றுவிடுவோம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு தொடர்ந்து படம் பண்ண வேண்டும் என இருந்தது. ஒரு ஃபார்முலாவுல படம் எடுத்தேன் அது வேலை செய்ய ஆரமித்துவிட்டது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள ஆரமித்ததும் எல்லோருக்கும் பயம் ஆரமித்துவிட்டது. ஆனால் இதற்கு முன்னால் இப்படியாக படம் எடுக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்த இயக்குநர்களும் படம் எடுக்க ஆரமித்துவிட்டார்கள். அவர்களுக்கு என் படம் ஒரு பலத்தை கொடுத்திருக்குனு நம்புறேன். என் படம் தோல்வி அடைந்திருந்தால் யாரும் இப்படியான படம் எடுக்க துணிந்திருக்க மாட்டார்கள். பிராமணர்கள் என்னில் இருந்து தூரமாகத்தான் இருக்காங்க. குழந்தை பருவத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தோம். ஒரு பருவம் வந்ததும் அவர்கள் தள்ளிப்போயிடுறாங்க. சினிமாவில் இனிமேல் புரட்சி பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஓரளவுக்கு நம்ம புரட்சி பேசிட்டோம்னு நினைக்குறேன். இனிமே நம்முடைய வாழ்வியலை நாம பேசனும்னு நினைக்குறேன் “ என்றார் பா.ரஞ்சித்