மேலும் அறிய

Saamaniyan Box Office: கம்பேக் தந்த ராமராஜனின் சாமானியன் வசூல் எப்படி? 2 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

Saamaniyan Box Office Details: ராமராஜன் நடித்து வெளியாகியுள்ள சாமானியன் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்..

ராமராஜன் நடித்துள்ள சாமானியன்

மக்கள் நாயகனாக கொண்டாடப் பட்ட ராமராஜன் கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்துள்ள படம் சாமானியன் (Saamaniyan) . கடந்த மே 23ஆம் தேதி வெளியாகிய இப்படத்தை ஆர். ராகேஷ் இயக்கியுள்ளார்.  எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை  தயாரித்துள்ளனர். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ராம்கோபி எடிட் செய்துள்ளார். எம்.எஸ் பாஸ்கர், ராதாரவி, கே,எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தனது படங்களின் வழியாக தொடர்ச்சியாக மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லி வந்த ராமராஜன் தனது கம்பேக் படத்திற்கு சிறப்பான மெசேஜ் உள்ள ஒரு கதைக்களத்தை தேர்வு செய்திருக்கிறார்.  வங்கிக் கடன்களால் ஏழை எளிய மக்கள் படும் கஷ்டத்தை ஒரு த்ரில்லர் பாணியில் சொல்லி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது சாமானியன் படம்.

ராமராஜனுக்கு அன்று இருந்த நட்சத்தர அந்தஸ்துக்கு ஏற்றாற்போலவே அவருக்கான காட்சிகளும், அவருக்கான ஆக்‌ஷன் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகளுக்கு எடிட்டர் கத்திரி போட்டிருந்தால் இரண்டாம் பாதி இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். படத்தின் மிகப்பெரிய பலமே இசைஞானி இளையராஜா ஆவார். ராமராஜன் படத்தில் இடம்பெற்ற அவரது சொர்க்கமே என்றாலும், செண்பகமே பாடல்களை ஆங்காங்கே தொட்டுச் சென்றிருப்பது ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படம் அவருக்கு சிறப்பான கம்பேக் படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வரும், நிலையில் சாமானியன் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சாமானியன் பாக்ஸ் ஆஃபிஸ்

படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் சாமானியன் படத்திற்கு மக்களிடையே குறைவான வரவேற்பே கிடைத்துள்ளது. திரையரங்குகளில் பெரும்பாலான காட்சிகள் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் சாமானியன் திரைப்படம் இந்திய அளவில் 7 லட்சம் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 3 லட்சம் படம் வசூலித்துள்ளதாக இந்த தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அடுத்து வரக் கூடிய இரண்டு நாட்களில் படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்,

 பிடி சார் வசூல்

சாமானியன் படம் வெளியான அடுத்த நாளில் வெளியாகிய மற்றொரு படம் பிடி சார். ஹிப்ஹாப் தமிழா காஷ்மீரா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், தேவதர்ஷினி, அனிகா சுரேந்திரன் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் இப்படத்தை தயாரித்துள்ளது. பிடி சார் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் முதல் நாளில் இப்படம் இந்தியளவில் ரூ.70 லட்சம் வசூல் செய்திருப்பதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget