Rakul Preet Singh: அச்சச்சோ! படுத்த படுக்கையாக கிடக்கும் ரகுல் ப்ரீத் சிங் - பதறும் ரசிகர்கள்
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக ஓய்வில் இருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய திரையுலகின் பிரபல நடிகையாக உலா வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கன்னட படம் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
படுத்த படுக்கையாக ரகுல் ப்ரீத்சிங்:
ரகுல் ப்ரீத்சிங் தன்னுடைய உடல்நலத்தில் எப்போதும் கவனமாக இருக்கக்கூடியவர். தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டார். அவர் உடற்பயிற்சி கூடத்தில் எடை தூக்கும் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த பயிற்சி செய்யும்போது வலி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இடுப்பில் பெல்ட் அணிந்து கொள்வது வழக்கம். ஆனால், அவர் பெல்ட் அணியாமல் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து வந்துள்ளார்.
இதனால், முதுகு வலி தற்போது அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த 6 நாட்களாக படுக்கையிலே ஓய்வு எடுத்து வரும் ரகுல்ப்ரீத்சிங் குணமாகி வருவதற்கு மேலும் 1 வார காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ரகுல் ப்ரீத் சிங்கே வெளியிட்டுள்ள வீடியோவில், “ என் அன்பான மக்களே! நான் முட்டாள் தனமான செய்த காரியத்தால் எனது உடலை கவனிக்க முடியவில்லை. எனக்கு பிடிப்பு ஏற்பட்டது தற்போது பெரிய காயமாக மாறியுள்ளது. கடந்த 6 நாட்களாக படுக்கையிலே உள்ளேன். இது குணம் அடைவதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆகலாம். நினைத்ததை விட விரைவில் குணம் ஆகிவிடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் எனக்கு ஓய்வை நான் கொடுப்பது மிகவும் எளிது அல்ல.
பாடம்:
இதில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், உங்கள் உடல் உங்களுக்கு சமிக்ஞை கொடுக்கும்போதே அதை கவனிக்கத் தொடங்குங்கள். எனது மனம் எனது உடலை விட வலுவானது என்று நினைக்கிறேன். நான் மீண்டு வர வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
34 வயதான ரகுல்ப்ரீத்சிங் தமிழில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்தியன் 3 படத்திலும் அவருடைய காட்சிகள் இடம்பெறுகிறது. இதுதவிர தே தே ப்யார் தே 2 படத்திலும் நடித்து வருகிறார்.ரகுல் ப்ரீத் சிங் முதுகுவலியால் அவதிப்பட்டு வருவது அவரது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.