மேலும் அறிய

Rajinikanth to Visit Ayodhya: அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 9-ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்று சாமியார்களைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்குப் பின்பு, உத்தரகாண்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார். இதையடுத்து, துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகைக்கு சென்றார். 

இதனை தொடர்ந்து இமயமலை பயணத்திலிருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். அங்குள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டதற்கு இடையே ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்தில் துறவிகளைச் சந்தித்தார். இதற்கிடையே உத்தரபிரதேச ஆளுநர் ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும் ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக  நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, தற்போது உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவில் இருக்கும் நிலையில் அம்மாநில முதலமைச்சருடன் படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஜெயிலர் படத்தை பார்த்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்து வசூலில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

ரஜினிகாந்த் நாடிப்பில் இதற்கு முன் வெளியான சில திரைப்படங்கள் எதிர்ப்பார்த்த அளவிலான வெற்றியை கொடுக்காத நிலையில், அவரது ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தார். அதன்படி முதல் நாளிலிருந்து நல்ல வசூலை இப்படம் பெற்று வந்தது. ஒரு வாரத்தை கடந்த நிலையில் உலகம் முழுவதும் 375 கோடி வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

மேலும் இன்னும் சில நாட்கள் வசூல் மழையில் ஜெயிலர் படம் நினையும் என எதிர்பார்த்த நிலையில் ஒன்பதாவது நாள் வசூல் சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் வசூல் வேட்டை நடத்திய நிலையில் மறுநாளில் இருந்து  வசூல் சற்று மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ஒன்பதாவது நாளான நேற்று உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க

Rahul Gandhi Bike Ride: சும்மா அதிருதுல்ல ..ஏகே பாணியில் லடாக்கிற்கு பைக்கில் சென்று பட்டையை கிளப்பிய ராகுல் காந்தி

Anbumani Statement: ”தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது; நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்க" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Embed widget