Rajinikanth: ஆளுநர் ரவியுடன் அரசியல் ரீதியாக விவாதித்தேன்.. ஆனால் அதை சொல்லமுடியாது - ரஜினிகாந்த்
தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ரஜினிகாந்த், “ ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்தோம். வடநாட்டுப்பகுதிகளிலேயே வசித்து வந்தவர், தமிழ்நாட்டு வந்திருக்கிறார். தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நேர்மை, கடின உழைப்பு, உண்மை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆன்மீக உணர்வு அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அரசியல் பற்றி நாங்கள் விவாதித்தோம். அதைப்பற்றி உங்களிடம் சொல்ல முடியாது.
"அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை”
மேலும், வரும் காலத்தில் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை” என்றார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா? என்று கேட்டதற்கு இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும், ஜி.எஸ்.டி. பற்றி கேட்டதற்கு கருத்து ஏதும் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார். மேலும் அவரிடம் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி உயர்வு குறித்து கருத்து என்ன கேட்ட போது நோ கமெண்ட்ஸ் என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர் உடனடியாக ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த ரசிர்களுக்கு, அரசியலுக்கு வருவதாக 2018ம் ஆண்டு ரஜினிகாந்த் அறிவித்தார். சட்டசபை தேர்தல் நெருங்கிய வேளையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதன்பின்னர், அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 15-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படம் குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25 ல் தொடங்கும்” என்று பேசினார்.
மேலும் படிக்க : GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்