FAFA OTT Malayankunju: ஃபஹத் பாசிலின் ‘மலையன் குஞ்சு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது, எதில்? அப்டேட்ஸ் இங்கே..
ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான 'மலையன்குஞ்சு' எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான 'மலையன்குஞ்சு' எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபஹத் பாசில். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’ பெரிய கவனத்தை பெற்ற நிலையில், அண்மையில் வெளியான ‘விக்ரம்’ படத்திலும் நடித்து மிரட்டி இருந்தார். தற்போது இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
இவரது நடிப்பில் அண்மையில் மலையாளத்தில் ‘மலையாளன் குஞ்சு’ படம் வெளியானது. கேரளாவில் அடிக்கடி நிகழும் நிலச்சரிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இயக்குநர் மகேஷ் நாரயணன் இயக்கிய இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
Survival thriller #FahadhFaasil’s #Malayankunju on @PrimeVideoIN from Aug 11th. #MalayankunjuOnPrime pic.twitter.com/EBhUUd23LJ
— S.Kalyani Pandiyan (@Kalyaniabp) August 8, 2022
இந்த நிலையில் இந்தப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
முன்னதாக இந்தப்படத்தை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், “ இந்தப்படம் சென்சிட்டிவான கதையம்சம் கொண்டது. பகத் பாசிலின் அற்புதமான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, படத்தை தத்ரூபமாக படக்குழுவின் முயற்சி உள்ளிட்டவை தியேட்டரில் அற்புதமான உணர்வை கொடுத்தது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று பேசியிருந்தார்.