TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN weather Senyor Cyclone Update: (26-11-2025): மலாக்கா ஜலசந்தியில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN weather Senyor Cyclone Update: (26-11-2025): சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று புயல் உருவாக வாய்ப்பு:
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலைகிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக தீவிரமடைந்துள்ளது. அதே பகுதியில் அட்சரேகை 5.1"N மற்றும் தீர்க்கரேகை 98.5°E, குட்டா மக்மூருக்கு (இந்தோனேசியா) கிழக்கே சுமார் 160 கிமீ, ஜார்ஜ் டவுனுக்கு (மலேசியா) மேற்கு-தென்மேற்கே 200 கிமீ, நான்கோவ்ரிக்கு (நிக்கோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 640 கிமீ மற்றும் கார் நிக்கோபருக்கு (நிக்கோபார்) தென்கிழக்கே 770 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
குறைந்த காற்றழுத்தப் பகுதி
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு இலங்கை மற்றும் பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் அருகிலுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பகுதி அதே பகுதியில் நீடித்தது. இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்தப் பகுதியாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்பு அதிகம்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் தல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வி வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இரண்டு நாட்களுக்கான வானிலை
27-11-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காளரக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மயிலாடுதுறை கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சினமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பறிலை 25-26 செல்சியஸை, வெப்பநிலை 25-26' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை!
தமிழக கடலோரப்பகுதிகள்:
26-11-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27-11-2025 முதல் 29.11-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.





















