Padayappa Rerelease : ரீரிலீஸில் சாதனை செய்த படையப்பா..ஒரே திரையரங்கில் 15 ஆயிரம் டிக்கெட் விற்பனை
Padayappa Rerelease : ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் ஆகும் படையப்பா படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது

நாளை டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படம் திரையரங்கில் மறுவெளியீடு ஆக இருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை ரோகினி திரையரங்கில் ரிலீஸூக்கு முன்பாக 15 அயிரம் டிக்கெட்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது படையப்பா திரைப்படம்
ரஜினி 75 ஆவது பிறந்தநாள்
சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ரஜினி இந்த ஆண்டோடு சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை கெளரவிக்கும் விதமாக அண்மையில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தது கோவா திரைப்பட விழா. நாளை டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகில் 50 ஆண்டுகள் , 75 ஆவது பிறந்தநாள் என இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றே சொல்லலாம்.
படையப்பா ரீரிலீஸ்
இந்த கொண்டாட்டத்தை சிறப்பாக்கும் வகையில் கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அண்மையில் காணொளி மூலம் படையப்பா படத்தின் பல சுவாரஸ்யமான அனுபவங்களை ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார். இந்த வீடியோவில் புகழ்பெற்ற நீலாம்பரி கதாபாத்திரத்தில் முன்னதாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருந்ததாகவும் படையப்பா படத்தின் கதை தன்னுடையது என்றும் ரஜின் பலருக்கு தெரியாத தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
ரீரிலீஸில் சாதனை செய்த படையப்பா
படையப்பா திரைப்படம் வெளியானபோது தமிழ் சினிமாவின் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைத்தது. இந்த முறை 8K Dolby Atmos தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. படத்திற்கான டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது. சென்னை ரோகினி திரையரங்கில் மட்டும் படையப்பா படத்திற்கு இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக திரையரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை ரீலீஸ் ஆன படங்களில் எந்த ஒரு படமும் செய்யாத அளவு டிக்கெட் விற்பனை படையப்பா படத்திற்கு நிகழ்ந்துள்ளது.
🔥PADAYAPPA RAGE! 🔥
— Rohini SilverScreens (@RohiniSilverScr) December 11, 2025
15,000 tickets sold before release - the highest ever pre-release sales by any cinema theatre for a re-release! 🤯💥
Thank you to all #Thalaivar fans for this historic record.
12.12.25 is going to be EPIC!#PadayappaReloaded #ThalaivarBirthday #RajiniMass… pic.twitter.com/DK3OZjzD6g





















