(Source: ECI/ABP News/ABP Majha)
“ரஜினி தலையிட்டதால் க்ளைமேக்ஸ மாத்த வேண்டியதா போச்சு” போட்டு உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..
லிங்கா திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி சொதப்பல்களூக்கு ரஜிகாந்த் தான் காரணம் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
லிங்கா திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி சொதப்பல்களுக்கு ரஜினிகாந்த் தான் காரணம் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
15 ஆண்டுகளுக்குப் பின்:
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் லிங்கா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் படையப்பா வெளியான பிற்கு 15 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் மூலம் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்தனர்.
கேலிக்குள்ளான க்ளைமேக்ஸ்:
இப்படத்தின் ஒரு பகுதி பாராட்டப் பட்டாலும், கிளைமேக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்கள் மட்டுமல்லால் பொதுவெளியிலும் கடுமையாக விமர்சனத்திற்குள்ளானது. மிக நீண்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சியில், பைக்கில் வேகமாக வரும் ரஜினிகாந்த், மலையில் இருந்து பைக்குடன் குதித்து பாராசூட் மீது விழுந்து, அதில் இருக்கும் வெடிகுண்டை அப்புறப்படுத்தி அணையைக் காப்பாற்றுவார். இந்த காட்சிகள் ரஜினி ரசிகர்களின் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் சோதித்தது. இதனையடுத்து இயக்குநர் கே,எஸ்,ரவிக்குமாரை அனைவரும் வறுத்தெடுத்தனர்.
க்ளைமேக்ஸ் சொதப்பலுக்கு காரணம்:
இந்நிலையில், தனியார் யூடியூப் ஊடகம் ஒன்றிற்கு கே.எஸ்,ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் லிங்கா திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார்.
“நான் எடுத்த படத்தில் அப்படியெல்லாம் காட்சிகள் இல்லை. அதில் க்ளைமேக்ஸே வேறு. அப்படத்தில் பலூனே கிடையாது. ஹைதராபாத்தில் மோனா கேஸோலினா பாடல் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது அவருக்கு சிறிது நேரம் கிடைத்தது. அப்போது வந்த ரஜினிகாந்த், என்ன பண்ணிட்ருக்கீங்க எடிட்டிங்ல? இப்ப பார்க்கலாமா? என்றார்.
இல்லை சார் அதில் 1500 அடி நீக்கவேண்டி இருக்கும். 1500 மீட்டர் தூக்கினால் தான் இரண்டாம் பாதியில் யூத் கேரக்டர்கள் நிறைய இருக்கிறது. அதை வைக்க முடியும் என்றேன் நான்.
அய்யய்ய யூத் ஹீரோ இல்லைங்க லிங்கேஸ்வரன் தான் ஹீரோ. கட் பண்ணதும் டேம வெடிக்கவிடாம பண்ணினதும் முடிஞ்சு போச்சு கதை. அதை ஒரே ரீல்ல முடிச்சிருங்க. லிங்கேஸ்வரன் போர்ஷன கெடுக்காதீங்க என்றார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.
"லிங்கா படம் அவளோ மோசமா தோல்வி ஆனதுக்கு காரணம் ரஜினிகாந்த் தான். நா யோசிச்சு வச்ச கதையை மாத்திட்டாரு. எங்க யாருக்குமே அது புடிக்கல. அவர் தலையிட்டதுனால எல்லாமே மாத்தவேண்டியதா போச்சு"
— ıllıllı⭐🌟 𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚 🌟⭐ıllıllı (@Mass_Maharaja) July 19, 2022
- கே.எஸ்.ரவிக்குமார் #KSRavikumar #Lingaa #Rajinikanth pic.twitter.com/Ejylt5dDE2
”சங்கர் போல் இருக்க வேண்டும்:”
மேலும், நாங்கள் நல்ல க்ளைமேக்ஸ் வைத்திருந்தோம். ஆனால், படத்தில் வேலை பார்த்த 9 அசிஸ்டெண்ட்டுகளுக்குப் பிடிக்கவே இல்லை இது. ஆனால், எதையாவது செய்து ரிலீஸ் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் என்ற அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. 12ம் தேதி அவரது பிறந்த நாளுக்கு படம் ரிலீஸ் ஆக வேண்டியதாகிவிட்டது. ஏனென்றால் கோச்சடையானும் அவரது பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆகவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் வெறுப்பா இருக்காங்க. அதனால் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றார்கள். அப்போது தான் இயக்குநர் சங்கரை போல இருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இயக்குநர் ரவிக்குமாரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.