“இமயமலையில் என்னை பிச்சைக்காரன் என நினைத்து ரூ. 10 கொடுத்தாங்க” - மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்த ரஜினி!
ரஜினியின் இன்டர்வியூ வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், “நிஜத்தில் நடிக்க தெரியவில்லை,கர்வம் இல்லாதவர், தலைக்கணம் இல்லாதவர் என்பது போன்ற பல கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.
நான் போறது பிஎம்டபுள்யூ கார், குடியிருக்கிறது போயஸ் கார்டன் உணவு ஐந்து அல்லது ஏழு நட்சத்திர ஓட்டல் இப்படி இருக்கும் போது என்னை எப்படி சிம்பிள்“ எனக்கூறுகிறார்கள்? என் உடையை வைத்தா? என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அபூர்வ ராகங்களாய் தொடங்கிய பயணம் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது. இதுவரை எத்தனை பாராட்டுக்கள், கைத்தட்டல்கள் எதற்கும் சலிக்காத ஒரு மனிதனாய் தன்னுடைய நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துவருகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் எப்போது தலைக்கணம் காட்டுவதில்லை என பலரும் கூறும் நிலையில், அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது பேட்டி ஒன்றில் ரஜினி குறிப்பிட்டுள்ள அனைத்துத் தகவல்களும் சுவாரசிஸ்யமாகவும், ரசிக்கும்படி அமைந்துள்ளது. அதில் “ என்னைப்பார்த்து அனைவரும் சிம்பிளிசிட்டி என்கிறார்… ஆனால் நான் போறது பிஎம்டபுள்யூ கார், குடியிருக்கிறது போயஸ் கார்டன் உணவு ஐந்து அல்லது ஏழு நட்சத்திர ஓட்டல் இப்படி இருக்கும் போது என்னை எப்படி சிம்பிள்“ எனக்கூறுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நீங்கள் எப்பொழுதாவது உங்களை சிட்டி ரோபா போன்று தனித்துவமாக நினைத்துள்ளீர்களா? எனத் தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, “சினிமாத்துறையினுள் நுழைந்த ஆரம்பத்தில் எனக்கு சம்பளம் 350 ரூபாயாக இருந்தது. ஆனால் சில காலங்களில் திடீரென 2 லட்சம் 3 லட்சம் என அதிகமானதும் என் மனதில் தோன்றியது நான் என்ன தனிப்பிறவியோ? ஆண்டவர் என்னை தனித்துவமாக படைத்துவிட்டாரா? என பல எண்ணங்கள் மனதில் தோன்றிது. சில காலங்களுக்கு பிறகுதான் எனக்கு புரிந்தது, இதற்குக் காரணம் அனைத்தும் நேரம் தான் எனவும் நானும் சாதாரண மனிதன் தான் எனவும் புரிந்துக்கொண்டேன். மேலும் மீடியா என்னை மிகவும் பிரபலமாக்கியது. இதோடு நான் 60 களில் சினிமாத்துறைக்கு வந்திருந்தால் சிவாஜி, எம்ஜிஆருக்கு பின்னால் நின்னு பேசிட்டு போய் இருப்பேன். ஆனால் என்னோட நேரம் , நான் இவங்க இல்லாத நேரத்துல வந்ததுனால தான் பிரபலமாகிவிட்டேன். மேலும் நான் இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு என்னுடைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதையாசிரியர்கள் தான் காரணம். அவர்களுக்கு நன்றி. மேலும் எந்திரன் 2.0 வில் ஹூரோவும் வில்லனும் அக்சய் குமாராக தான் இருந்தார். சிட்டி தேவைப்பட்டதால் நான் நடிக்க வந்தேன்” எனக் கூறியுள்ளார்.
பொதுவாக ரஜினி பொது இடங்களுக்குச் செல்லும் போது மாறுவேடத்தில் தான் செல்வார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ஒருமுறை பெங்களுரில் மாறுவேடம் போட்டு வெளியே சென்றேன். அப்போது தீடிரென என்னுடைய கார் பிரச்சனை ஏற்படவே ஆட்டோவிற்காக காத்திருந்தேன். அப்போது தலைவா என்று ஒரு குரலைக் கேட்டதும், அய்யோ யாரோ வந்துவிட்டார்கள் என்ற அச்சத்துடன் சென்றுக்கொண்டிருந்த போது திரும்பிப்பார்க்கும் அவர் என்னை அழைக்கவில்லை, வேறு யாரையோ அழைத்துள்ளார்கள் என தெரிந்துக்கொண்டேன். இச்சம்பவம் என்னால் எப்போதும் மறக்கமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
“இதோடு இமயமலையில் ஒரு முறை சாமி கும்பிட சொல்லும்போது, என்னை பிச்சைக்காரன் என நினைத்து 10 ரூபாய் எடுத்து கையில் குடுத்தாங்க. பின்னர் 200 ரூபாய் உண்டியலில் எடுத்து நான் போட்டதைப்பார்த்ததும் யார் என தெரியாமல் யோசித்தார். இதனையடுத்து காரில் ஏறி சென்றதும் ஆச்சரியத்துடன் பார்த்த சம்பவம் என்னுடைய நினைவில் இப்போதும் உள்ளது” என ரஜினிக்கே உரிய நக்கலான பாணியில் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகும் நிலையில், “நிஜத்தில் நடிக்க தெரியவில்லை,கர்வம் இல்லாதவர், தலைக்கணம் இல்லாதவர் என்பது போன்ற பல கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.