மேலும் அறிய

Rajamouli about Aadukalam : ராஜமௌலியின் லிஸ்டில் இடம் பெற்ற வெற்றிமாறன்... தி நியூயார்க்கர் வாசகர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'ஆடுகளம்'  

வெற்றிமாறனின் 'ஆடுகளம்' திரைப்படத்தை தி நியூயார்க்கர் இதழ் வாசகர்களுக்கு பரிந்துரைத்துள்ளார் உய்குர் எஸ்.எஸ். ராஜமௌலி

 

அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரபலமான பத்திரிகைகளில் ஒன்று தி நியூயார்க்கர். இந்த இதழுக்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் அளித்த பதில்களை இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

 

Rajamouli about Aadukalam : ராஜமௌலியின் லிஸ்டில் இடம் பெற்ற வெற்றிமாறன்... தி நியூயார்க்கர் வாசகர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'ஆடுகளம்'  

 

மற்ற நாடுகளிலும் வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர் :

கடந்த ஆண்டு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்து வருகிறது. திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய கவுரவ விருதான ஆஸ்கர் விருதுகளின் நாமினேஷன் பட்டியலில் பல பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு இந்திய ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எந்த அளவிற்கு இருந்ததோ அதே போன்ற வரவேற்பு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்க்க வேண்டிய ஐந்து படங்கள் :

தி நியூயார்க்கர் இதழுக்காக ராஜமௌலியிடம் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று அவர் தி நியூயார்க்கர் இதழ் வாசகர்கள்   அவசியம் பார்க்க வேண்டும் என ஐந்து படங்களை பட்டியலிட வேண்டும் என கேட்கப்பட்டது. அதற்கு எஸ்.எஸ். ராஜமௌலி பதிலளிக்கையில் "சங்கராபரணம்", "முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.", "பண்டித் ஃகுயீன்", "ப்ளாக் ப்ரைடே", "ஆடுகளம்" நிச்சயம் பார்க்க வேண்டும். மேலும் அதனுடன் சேர்த்து நான் இயக்கிய 'ஈகா' படத்தையும் அவசியம் பார்க்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். 

தேசிய விருதுகளை குவித்த ஆடுகளம் :

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், டாப்ஸி பண்ணு, முருகதாஸ், கிஷோர், நரேன் உள்ளிட்டோரின் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆடுகளம்'. இப்படத்தின் நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அது மட்டுமின்றி 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதை கைப்பற்றியது ஆடுகளம் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெற்றது. 

எஸ்.எஸ். ராஜமௌலி ஐந்து இந்திய படங்களின் பட்டியலில் ஆடுகளம் திரைப்படத்தை பகிர்ந்ததை மிகவும் பெருமிதத்துடன் சோசியல் மீடியா மூலம் பகிர்ந்து வருகிறார்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீட்டு சமயத்தில் கூட வெற்றிமாறனின் 'அசுரன்' திரைப்படத்தை ராஜமௌலி பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget