Raiza wilson: ‛ஃபோர்க் ஸ்பூன்’ சாப்பாடு... உள்ளத்திலே உறக்கம்... ரைசாவின் டீலக்ஸ் நாய்!
நாய்க்கு ஊட்டி விடுவதெல்லாம் இன்று சர்வசாதாரணமாக நடப்பது தான். ஆனால், அதற்காக ஃபோர்க் ஸ்பூனில் ஊட்டி விடுவதெல்லாம் கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான ரைசா வில்சன், அதன் பின் சில படங்களில் நடித்தார். ஹீரோயின் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்த நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் திடீரென முகத்தில் ஏற்பட்ட தோல் நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கு மருத்துவர் அளித்த சிகிச்சையே காரணம் என பரபரப்பாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாக வெடிக்க, சில வாரங்கள் பேசும் பொருளாக ரைசா வில்சன் இருந்தார். ரைசாவின் குற்றச்சாட்டுக்கு சிகிச்சையளித்த டாக்டர் புது விளக்கம் அளிக்க, இருதரப்பில் யார் சொல்வது உண்மை என்கிற கேள்வி எழுந்தது.
அதன்பின் சட்டரீதியான பிரச்னையில் இருவரும் இறங்க, ஒரு வழியாக பொதுவெளியில் இருந்து அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. அதன் பின் மீண்டும் பழைய அழகை பெற்ற ரைசா, வழக்கம் போல சினிமாவில் தன் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், ரைசா தனது நாய் பற்றிய சில பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
View this post on Instagram
அதில் தனது செல்ல நாயுடன் பல்வேறு கோணங்களில் அவர் எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குழந்தைக்கு அல்லது குழந்தையை விட அதிக முக்கியத்துவம் தரப்படும் நாயாக தனது நாயை வளர்த்து வருவது தெரிகிறது.
நாய்க்கு ஊட்டி விடுவதெல்லாம் இன்று சர்வசாதாரணமாக நடப்பது தான். ஆனால், அதற்காக ஃபோர்க் ஸ்பூனில் ஊட்டி விடுவதெல்லாம் கொஞ்சம் ஓவராகவே இருந்தது. குழந்தையை உறங்க வைப்பது போன்று, தன் நெஞ்சத்தில் நாயை உறங்க வைப்பதும், அதற்காக பிரத்யேக இடங்களை ஒதுக்கி இருப்பதும் அந்த போட்டோ மற்றும் வீடியோவில் தெரிகிறது.
View this post on Instagram
நாயோடு கொஞ்சி விளையாடும் ரைசாவின் இந்த பதிவிற்கு அவரது ரசிர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தும், மகிழ்ச்சியை தெரிவித்தும் பதிலளித்து வருகின்றனர்.