மேலும் அறிய

Watch Video : ‘நாங்க ஒன்னா சேர்ந்தா ரவுசு தான்’... நெகிழ வைக்கும் ராதிகா- ஸ்ரீப்ரியாவின் ‘நட்புக்காக’ வீடியோ!

80'ஸ்களில் கலக்கிய முன்னணி நடிகைகளான ராதிகா மற்றும் ஸ்ரீப்ரியாவின் வெளிநாட்டு டூர் வீடியோ ஒன்றை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

தமிழ் சினிமாவில்  மிகவும் போல்டான நடிகைகள் எத்தனையோ பேரை கடந்து வந்துள்ளோம். யாருக்கும் அஞ்சாத துணிச்சலான, நடிப்பு ரீதியாகவும் ஆளுமை ரீதியாகவும் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் முன்னணி நடிகைகளாக 80களில் கொடி கட்டி பறந்த நடிகைகள் ராதிகா மற்றும் ஸ்ரீப்ரியா. 

 

Watch Video : ‘நாங்க ஒன்னா சேர்ந்தா ரவுசு தான்’... நெகிழ வைக்கும் ராதிகா- ஸ்ரீப்ரியாவின் ‘நட்புக்காக’ வீடியோ!
தமிழ் சினிமா மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் இருவருக்குமே முக்கியமான இடம் உண்டு. இருவரும் ஒரே காலகட்டங்களில் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் அவர்கள் இருவருமே நகமும் சதையும் போன்ற நெருக்கமான தோழிகள். அன்று தொடங்கிய இவர்களின் நட்பு இன்று வரை சற்றும் தளர்வுகள் இன்றி தொடர்கிறது. அதற்கு உதாரணமாக இந்த இரண்டு பியூட்டிஸும் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், செய்த லூட்டிகள் அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களின் கவனம் ஈத்துள்ளனர். 


ராதிகா சரத்குமார் தனது சோசியல் மீடியாவில் அவர்களின் அழகான பயண வீடியோ ஒன்றை பகிர்ந்து அவர்களின் அழகான நட்பு குறித்து ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார். ஸ்ரீப்ரியாவை ஆலு என அழைக்கும் பழக்கமுடையவர் ராதிகா, அவரின் குறிப்பில் "ஆலூவும் நான் எங்கள் குழந்தை பருவம் முதல் நெருங்கிய தோழிகள். எங்களுக்குள் ஒரு சிறப்பான பந்தம் உள்ளது. நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போது அது பயங்கரமாக இருக்கும் என பலரும் எங்களை பார்த்து பயந்தது உண்டு. ஆனால் எங்களை பற்றின இந்த இமேஜை தகர்க்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அதை சுட்டிக்காட்டிய டிடிக்கு நன்றிகள்.

நாங்கள் இருவரும் இந்த பயணத்தின் போது பல நினைவுகளை இந்த வீடியோ மூலம் உங்களுடன் பகிர்ந்துள்ளோம். ஸ்ரீப்ரியாவும் நானும் ஒருவரை ஒருவர் பற்றி என்ன நினைக்கிறோமோ அதை ஒளிவு மறைவு இன்றி நேரடியாக பேசிக்கொள்வோம். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஷாப்பிங் செய்வோம், எங்களின் குழந்தைகள், வாழ்க்கை, டயட், ஹெல்த்,  ஒர்க் அவுட் இப்படி அனைத்தையும் பற்றி பகிர்ந்து கொள்வோம். ஸ்ரீப்ரியா உடன் இருக்கும் நேரத்தில் டல் மொமெண்ட்ஸ் இருக்கவே இருக்காது. இந்த பயணம் எங்களுக்கு ஏராளமான மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ளது" என பகிர்ந்து இருந்தார் ராதிகா. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)


அதே போல ஸ்ரீப்ரியா தனது குறிப்பில் "ராதிகா பாப்பா எப்போதுமே என்னுடைய முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைப்பாள். அவளுடைய பிஸியானா ஷெட்யூலின் சமயத்தில் கூட எனக்காக நேரம் ஒதுக்குபவள் அவள் மட்டுமே. நான் அழுவதற்கும் சிரிப்பதற்கும் காரணமாக இருப்பவள் ராதிகா தான். இந்த பயணம் நிச்சயம் மறக்க உடையாத ஒரு தருணமாக அமைந்தது" என பதிவிட்டுள்ளார் ஸ்ரீப்ரியா . 

பல நாட்களுக்கு பிறகு ஸ்ரீப்ரியாவை இந்த வீடியோ மூலம் பார்த்த அவரின் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விஷுவல் ட்ரீட்டாக இருந்தது. இந்த வீடியோ போஸ்ட் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TN Heat Wave : இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
Embed widget