Pushpa | ஒரே App.. 8 நாட்கள்.. 35 லட்சம் டிக்கெட்டுகள் - மாஸ் காட்டிய புஷ்பா!!
குறிப்பாக கிறிஸ்துமஸ் தினத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்பட லிஸ்டிலும் இருக்கிறது புஷ்பா.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்துள்ளது. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் புஷ்பா படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டிக்கெட் விற்பனையில் இப்படம் மாஸ் காட்டியுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் இப்படம் புக் மை ஷோ செயலில் 3.5 மில்லியன் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. அதாவது 35 லட்சம் டிக்கெட்டுகள். வசூலிலும் ஏற்கெனவே 100 கோடி பட்டியலில் படம் இணைந்துள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ் தினத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்பட லிஸ்டிலும் இருக்கிறது புஷ்பா. புஷ்பாவின் வெற்றியால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.
புஷ்பா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.
Rajinikanth Foundation: ரஜினிகாந்த் அறக்கட்டளை நடத்தும் இலவச TNPSC குரூப் தேர்வு பயிற்சி..!
அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்கும் முறையே 'அலா வைகுந்தபுரமுலோ' மற்றும் 'ரங்கஸ்தலம்' ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு 'புஷ்பா: தி ரைஸ்' வெளியானது. 'அலா வைகுந்தபுரமுலோ' வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்