Rajinikanth Foundation: ரஜினிகாந்த் அறக்கட்டளை நடத்தும் இலவச TNPSC குரூப் தேர்வு பயிற்சி..!
எங்களுக்கு உலகலாளவிய பார்வை இருந்தாலும், எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ் நாட்டில் மட்டுமே எடுக்கிறோம்
இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் பத்ம விபூஷன் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி, அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
எங்களுக்கு உலகலாளவிய பார்வை இருந்தாலும், எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ் நாட்டில் மட்டுமே எடுக்கிறோம். தமிழ்நாட்டின் மக்களின் கருணையும் அன்பும்தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று ரஜினிகாந்த் எப்போதும் கூறுவார். எனவே, இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும்.
#JUSTIN | டின்.பி.எஸ்.சி. தேர்வுக்கு பயிற்சியளிக்க ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இணையதளம் தொடக்கம் https://t.co/wupaoCQKa2 | #Rajinikanth | #TNPSC pic.twitter.com/Mq3KyZWkNq
— ABP Nadu (@abpnadu) December 27, 2021
நம் அறக்கட்டளை “ சிறிய ஆரம்பம், நிலையான முயற்சி, சுயத் திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என்ற கருத்தை நம்புகிறது. ரஜினிகாந்த் ஆசியுடன், இலவச TNPSC குரூப் தேர்வு பயிற்சிக்கான “ சூப்பர் 100 பிரிவு” பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்ற அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து ஓய்வில் இருந்த ரஜினி அதன் பின்னர் அண்ணாத்த படத்தில் நடித்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், நல்ல வசூலை ஈட்டியதாகச் சொல்லப்படுகிறது. ரஜினிக்கு மிகவும் நெருக்கமான படமாக மாறிய அண்ணாத்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர்கள் பாண்டியராஜ் அல்லது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்