மேலும் அறிய

நடிகர்களுக்கு ஆணுறை சப்ளை.. தயாரிப்பாளர் மீது பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு!

சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த பலரும் யூட்யூப் சேனல்களில் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிறமொழி சினிமா துறையில் நடக்கிறது.

தயாரிப்பாளர்கள் சிலர் நடிகர்களுக்கு ஆணுறை கூட சப்ளை செய்யும் அளவுக்கு கவனிக்கிறார்கள் என பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான சக்கரவர்த்தி சந்திரசூட் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த பலரும் யூட்யூப் சேனல்களில் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிறமொழி சினிமா துறையில் நடக்கிறது. இப்படியான நிலையில் கன்னட நடிகர், இயக்குநர் சக்கரவர்த்தி சந்திரசூட் கருத்து தெரிவிக்கும் பெயரில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

அதில் சக்கரவர்த்தி சந்திரசூட் சொந்தமாக யூட்யூப் சேனல் வைத்துள்ளார். அவர் சமீபத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் சர்ச்சையில் சிக்கி ரிலீசாகாமல் இருப்பதைப் பற்றி பேசினார். அப்போது தயாரிப்பாளர்களைப் பற்றி மிக மோசமான கருத்துகளைப் பதிவு செய்தார். 

அதாவது, ஹீரோக்களைப் பொறுத்தவரை சில தயாரிப்பாளர்கள் அவர்களுக்கான கழிவறைகளை கூட தங்கத்தால் கவனித்துக் கொள்கிறார்கள். ஹீரோக்கள் வீட்டுக்கு ஆணுறைகள் கூட எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் தொழில்நுட்ப கலைஞர்கள் தொடங்கி லைட்மேன்கள், புரோமோஷன் குழு, எழுத்தாளர்கள் என வரும்போது அவர்களுக்கு சரியான பணம் கொடுக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களால் இந்த சம்பவம் பற்றி வெளியே பேச முடியவில்லை. இப்படியான விஷயத்தை பெரிய தயாரிப்பாளர்கள் தான் செய்கிறார்கள் என பெயர் குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசியது வேண்டுமென்றே அவமதிப்பு செய்வது, போன்ற பிரிவுகளில் சக்கரவர்த்தி சந்திரசூட் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் சக்ரவர்த்தி சந்திரசூட் நடிகர் கிச்சா சுதிப்பின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராவார். தயாரிப்பாளர்கள் ஹீரோவுக்கு ஆணுறை கொடுத்ததாக சந்திரசூட் கூறியுள்ள நிலையில் அவர் அதை கண்ணால் பார்த்தாரா?, அப்படியான தயாரிப்பாளர் யார் என சொன்னால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தயாரிப்பாளர் கே. மஞ்சு தெரிவித்துள்ளார். 

கே.வி.என் நிறுவனத்தைப் பற்றிப் பேச சக்கரவர்த்தி சந்திரசூட்டுக்கு எந்த அவசியமும் இல்லை. அவர் சென்சார் போர்டு, நீதிமன்றம் பற்றி பேசியுள்ளார். எதையும் தெரியாமல் பேசக்கூடாது. அவரின் பேச்சு ஆணவத்தின் உச்சம். தனது யூடியூப்பில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அப்படி பேசலாம் என்பதை ஏற்க முடியாது. ஒரு தயாரிப்பாளருக்கு என்ன சிரமங்கள் உள்ளது என்பது மற்றொரு தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். கன்னட சினிமாவில் கடந்த 3 மாதங்களில் சுமார் ரூ. 200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கே. மஞ்சு கடுமையாக சாடியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget