மேலும் அறிய

Andhagan Box Office : வசூலில் ஜெயித்தாரா டாப்ஸ்டார் பிரசாந்த்... அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல்

Andhagan Box Office : பிரசாந்த் நடித்து நேற்று திரையரங்கில் வெளியான அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம்

அந்தகன்

டாப்ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் நேற்று ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிம்ரன் , பிரியா ஆனந்த் , கார்த்திக் , ஊர்வசி , சமுத்திரகனி , கே.எஸ் ரவிக்குமார் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இபடத்தில் நடித்துள்ளார்கள். இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்ததுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகி இருக்கும் அந்தகன் நடிகர் பிரசாந்தின் கம்பேக் படமாக அமையும் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அந்தகன் விமர்சனம்

பியானோ இசைக் கலைஞரான பிரசாந்த் ஒரு பரிசோதனை முயற்சியாக பார்வை இல்லாதவராக நடிக்கிறார். அவரை நிஜமாகவே பார்வை இல்லாதவர் என நினைத்துக் கொள்ளும் பிரியா ஆனந்த் தனது கஃபேவில் பியானோ வாசிக்கும் வேலை வாங்கி தருகிறார். பிரசாந்த் பியானோ வாசிப்பதை பார்த்து தனது திருமண நாளில் தன் மனைவிக்காக பிரசாந்தை பியானோ வாசிக்க சொல்கிறார் நடிகர் கார்த்திக். கார்த்திக் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சிம்ரன் தனது காதலனான சமுத்திரகனியுடன் இருப்பதை பார்த்து விடுகிறார். இதனால் சிம்ரன் கார்த்திக்கை போட்டுத்தள்ளுகிறார்.

இதை  பார்த்த பிரசாந்த் கண் தெரியாதவர் போலவே அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார். ஆனால் பின் பிரசாந்திற்கு கண் தெரியும் என்கிற உண்மை தெரிய வர அவரையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் சிம்ரனும் அவர் காதலனாக வரும் சமுத்திரகனியும். இவர்களிடம் இருந்து பிரசாந்த் எப்படி தப்பிக்கிறார் என்பதே அந்தகன் அல்லது அந்தாதுன் ஆகிய இரு படத்தின் கதையும்.

அந்தகன் முதல் நாள் வசூல்

அந்தகன் படம் முதல் நாளில் இந்தியளவில் 65 லட்சம் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.  விமர்சன ரீதியாகவும் படம் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் தற்போது வசூல் ரீதியாக சிறப்பான ரிஸல்ட் கொடுத்து வருகிறது. அடுத்து வரும் வாரங்களில் அந்தகன் படத்தின் வசூல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்

சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக வெளியான மகாராஜா படம் பெரியளவில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷின் 50 ஆவது படமாக வெளியான ராயன் படமும் 100கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. தற்போது பிரசாந்தின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் அந்தகன் படமும் பெரியளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே அந்தகன் படம் டாப்ஸ்டார் பிரசாந்திற்கு கம்பேக் படமாக அமைந்ததா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget