மேலும் அறிய

Andhagan First Single: அனிருத் , விஜய் சேதுபதி குரல்! பிரபுதேவா இயக்கம்: அந்தகன் முதல் பாடலை வெளியிடும் விஜய்..

பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் முதல் பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடியிருக்க நடிகர் விஜய் இந்தப் பாடலை வெளியிடுகிறார்

அந்தகன்

பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'அந்தாதூன்' திரைப்படம் தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரஷாந்த் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நடிகை சிம்ரன், பிரியா ஆனந்த், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாந்தின் தந்தை இயக்குநர் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். அந்தகன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அந்தகன் பாடலை வெளியிடும் நடிகர் விஜய்

அந்தகன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான அந்தகன் ஆந்தம் பாடலை வரும் ஜூலை 24 ஆம் தேதி நடிகர் விஜய் வெளியிட இருப்பதாக பிரசாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உமாதேவி இப்பாடலுக்கு பாடல்வரிகளை எழுதியுள்ளார். சான்டி மாஸ்டர் நடனம் கற்பித்துள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளார்கள். பிரபுதேவா இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.  வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அந்தகன் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தி கோட்

பிரபுதேவா , பிரஷாந்த் , விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் தி கோட் . இவர்கள் தவிர்த்து இப்படத்தில் சினேகா , லைலா , வைபவ் , பிரேம்ஜி , மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நடிகை த்ரிஷா இப்படத்தில் கெளர தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. தி கோட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வி.எஃப்.எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
CHN-TRY Flight: சென்னை-திருச்சி விமான பயணிகளுக்கு இனி ஜாலிதான்.. பணம் மிச்சமாகப் போகுது.. எப்படி தெரியுமா.?
சென்னை-திருச்சி விமான பயணிகளுக்கு இனி ஜாலிதான்.. பணம் மிச்சமாகப் போகுது.. எப்படி தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat RatnaRahul Gandhi | எகிறி அடிக்கும் திமுக! SILENT MODE-ல் காங்கிரஸ்! வாயை திறப்பாரா ராகுல்? | MK Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
CHN-TRY Flight: சென்னை-திருச்சி விமான பயணிகளுக்கு இனி ஜாலிதான்.. பணம் மிச்சமாகப் போகுது.. எப்படி தெரியுமா.?
சென்னை-திருச்சி விமான பயணிகளுக்கு இனி ஜாலிதான்.. பணம் மிச்சமாகப் போகுது.. எப்படி தெரியுமா.?
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
Embed widget