Dude Trailer : தாலி செண்டிமெண்டை உடைக்கும் பிரதீப் ரங்கநாதன்..ட்யூட் படத்தின் டிரெய்லர் இதோ
Dude Movie Trailer : கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ட்யூட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளம் நடிகர்களின் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ட்யூட் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.குறிப்பாக டிராகன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. ட்யூட் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது
ட்யூட் படத்தின் டிரெய்லர்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ட்யூட். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
#Dude Trailer
— Pradeep Ranganathan (@pradeeponelife) October 9, 2025
Tamil - https://t.co/3tPq6WFKsD
Telugu - https://t.co/6SFh9HT28Y
ஆக்ஷன் , ரொமான்ஸ் , காமெடி என முழுக்க முழுக்க பிரதீப் ரங்கநாதன் ஸ்டைலில் கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது டூட் திரைப்படம். வெட்டியாக சுத்தும் நாயகன். அவனை திருத்தும் நாயகி. நாயகன் நாயகிமேல் காதலில் விழுகிறான். நாயகி அவன் காதலை ரிஜெக்ட் செய்கிறாள். ஆனால் அவளுக்கு ஒரு பிரச்சனை என்கிற போது நாயகன் உதவி செய்கிறான். ட்யூட் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையில் காலம் காலமாக தமிழ் சினிமாவில் சுடப்படும் அதே வடை போல் தான் தெரிகிறது. புதுமையான விஷயம் என்னவென்றால் காலம் காலமாக இதே தமிழ் சினிமாவில் தூக்கி பிடித்த தாலி செண்டிமெண்டை உடைப்பதே இப்படத்தின் மையக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் . பிரதீப் ரங்கநாதனின் டிபிக்கல் மேனரிஸம் , மமிதா பைஜூவின் க்யூட் ரியாக்ஷன் , சாய் அப்யங்கரின் புதுமையான இசை என ட்யூட் திரைப்பட்ம இந்த தீபாவளிக்கு ரசிகர்கள் கொண்டாடி மகிழத் தேவையான ஒரு பக்கா பேக்கேஜாக தெரிகிறது





















