Poonam Pandey: பொய் செய்தி பரப்பிய பூனம் பாண்டே! ஆப்பு வைக்க தயாராகும் போலீஸ்.. என்னாச்சு?
பொய் செய்தியை பரப்பி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடிகை பூனம் பாண்டேவுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.
சர்ச்சையை கிளப்பிய பூனம் பாண்டே:
இதற்கிடையில் சர்ச்சைக்குரிய நடிகையாக திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே, நேற்று முன்தினம் கர்ப்பைப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
32 வயதான பூனம் பாண்டே உயிரிழந்தது தொடர்பான செய்தி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் புரட்டி போட்டது. பலராலும் இந்த தகவலை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனை அடுத்து, நேற்று சமூக வலைதள பக்கத்தில் நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டிருந்தார்.
"நான் இங்கே உயிருடன் தான் இருக்கிறேன். கர்ப்பவாய் புற்றுநோய் என்னைக் கொல்லவில்லை. ஆனால் சோகம் என்னவென்றால், இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் இந்நோய் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரைக் கொன்றுள்ளது. மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பவாய் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது.
5 ஆண்டுகள் சிறை தண்டனையா?
இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் உள்ளன" என்றார். தொடர்ந்து, "எனது இறப்பு செய்தி அறிந்து கண்ணீர் சிந்தியவர்களுக்காக வருந்துகிறேன். எனது நோக்கம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்" என்றார். பொய் செய்தி பரபரப்பிய பூனம் பாண்டேவுக்கு சினிமா பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
பொய் செய்தி பரப்பிய பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பொய் செய்தி பரப்பிய பூனம் பாண்டேவுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67படி சமூக வலைதளத்தில் தவறான செய்தியை பரப்பினால் 3 ஆண்டுகள் முதல் 5 வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, யாராவது வழக்கு தொடர்ந்தால் பூனம் பாண்டேவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.
மேலும் படிக்க
"மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்" வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்!