Ponniyin selvan: ‛பெரிய பழுவேட்டையர்... சின்ன பழுவேட்டையர் பராக்...’ PS1 கதாபாத்திரங்கள் ரிலீஸ்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் சரத்குமார் கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. சரத்குமார் பெரிய பழு வேட்டையராகவும்,பார்த்திபன் சின்ன பழு வேட்டையராகவும் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் சரத்குமார் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழு வேட்டையராகவும், நடிகர் பார்த்திபன் சின்ன பழு வேட்டையராகவும் நடித்துள்ளனர். அவர்களின் கதாபாத்திர புகைப்படங்கள் மோஷன் போஸ்டராக ட்விட்டரில் இன்று வெளியாகியுள்ளது.
Meet the fearless protectors of Chola pride! Presenting @realsarathkumar as Periya Pazhuvettarayar and @rparthiepan as Chinna Pazhuvettarayar!#PS1 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/tPJ0yD9qXQ
— Nikil Murukan (@onlynikil) September 1, 2022
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
View this post on Instagram
5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது.கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடல் பாடலின் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து 2 ஆம் பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியானது. சோழா சோழா என தொடங்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். சத்ய பிரகாஷ், வி.எம்.மகாலிங்கம், நகுல் அபயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.