ponniyin selvan : "பழிவாங்கும் முகம் அழகானது” - நந்தினியாக ‘ஐஸ்வர்யா ராய் ‘ ! பொன்னியின் செல்வன் அப்டேட்!
அலப்பறை இல்லாத எளிமையான தோற்றத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
பொன்னியின் செல்வன் :
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட்கள் இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து வர உள்ளன.பொன்னியின் செல்வன் படத்தில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்துள்ளனர். தற்போது படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட தொடங்கியுள்ளனர். ஏற்கனவே விக்ரம் மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ராணி நந்தினியாக ‘ஐஸ்வர்யா ராய்’:
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ராணி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். திரைப்படத்தில் அவர் நடிக்கும் தோற்றம் குறித்த புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. அலப்பறை இல்லாத எளிமையான தோற்றத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அதற்கு கேப்ஷனாக “ ”பழிவாங்கும் முகம் அழகானது ராணி நந்தினியை வரவேற்கிறோம் “ என குறிப்பிட்டுள்ளனர்.
View this post on Instagram
வந்தியதேவனாக ’கார்த்தி’ :
முன்னதாக கார்த்தியின் தோற்றத்தை வெளியிட்ட படக்குழு “ ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன்... இதோ வந்தியத்தேவன்!” என அறிமுகப்படுத்தியிருந்தனர்.
View this post on Instagram
ஆதித்த கரிகாலனாக ‘விக்ரம் ‘
முதன் முதலில் விக்ரமின் தோற்றத்தை வெளியிட்ட படக்குழு “சோழப் பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம்! கடுமையான போர்வீரன். காட்டுப் புலி. ஆதித்த கரிகாலன்! “ என அறிமுகம் செய்து வைத்தனர் .
View this post on Instagram