Ponniyin Selvan Sneak Peek: ஆதித்த கரிகாலனை கொல்ல சபதமெடுக்கும் ரவிதாசன்..வெளியானது Sneak Peek!
எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்படுகிறது. படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர்.
இயக்குநர் மணிரத்னத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை கிட்டதட்ட ரூ.5 கோடிக்கான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
An exclusive sneak peek from #PS1 on @moviebuffindia
— Lyca Productions (@LycaProductions) September 27, 2022
▶️ https://t.co/GUDs7Qfr1c
In theatres from 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!#PonniyinSelvan1 #PS1FromSep30 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/m0gPbWgkyn
மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்படுகிறது. இதனிடையே படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ரவிதாசனாக வரும் கிஷோர் பாண்டிய மன்னர் வீரபாண்டியரை தலையறுத்துக் கொன்ற ஆதித்த கரிகாலனை கொள்வோம் என சூளுரைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இதனை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.