Trisha-Prakash Raj: முத்துப்பாண்டியின் நிறைவேறாத காதல்.... பிரகாஷ் ராஜ் பகிர்ந்த வீடியோ... த்ரிஷாவின் க்யூட் ரியாக்ஷன்!
”இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் என் நாளை முழுமையாக்கி விட்டீர்கள்.. செல்லம்ஸ் ஐ லவ் யூ” என த்ரிஷாவை டேக் செய்து பிரகாஷ்ராஜ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

2004ஆம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் நடிகர் விஜய், த்ரிஷாவைத் தாண்டி ஸ்கோர் செய்து, தமிழ் சினிமாவின் ஜாலியான வில்லன்களில் ஒருவராக என்றும் கொண்டாடப்படும் கதாபாத்திரம் நடிகர் பிரகாஷ் ராஜின் ’முத்துப்பாண்டி’ கதாபாத்திரம்!
தமிழ் சினிமா ரசிகர்களை ’செல்லம்ஸ்’ என தன்னை இந்தப் பாத்திரத்தின் மூலமாக கொண்டாட வைத்தார் பிரகாஷ் ராஜ்!
தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவை தன் உயிருக்கும் மேலாக நினைத்து உருகி, அவரை சுற்றி இருப்பவர்களை போட்டுத் தள்ளி, விடாப்படியாக விரட்டி காதலித்து டார்ச்சர் செய்யும் இந்தக் கதாபாத்திரமும், அதன் காதல் தோல்வியும், ரசிகர்களை இன்றுவரை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.
கோலிவுட் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக வலம் வரும் இந்த முத்துப்பாண்டி கதாபாத்திரத்தை வைத்து இணையத்தில் அடிக்கடி மீம்ஸ், வீடியோக்கள் ரிலீஸ் செய்து குபீர் சிரிப்பை வரவழைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர் மீம் க்ரியேட்டர்கள்.
Muthupandi - the man you know, the story you don't 🥺
— SUN NXT (@sunnxt) July 1, 2022
Watch the blockbusters #96 and #Ghilli now streaming on #SunNXThttps://t.co/IVe6K4FkNBhttps://t.co/H9neLtb5MD#96Movie #Trisha #PremKumar #VijaySethupathi #Dharani #ActorVijay #PrakashRaj @trishtrashers @prakashraaj pic.twitter.com/Qe9aqwyS43
அந்த வகையில் முன்னதாக ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷின் அப்பாவாக தோன்றும் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரத்தில், முத்துப் பாண்டி பிரகாஷ்ராஜ், அவர் விரட்டி விரட்டி காதலிக்கும் த்ரிஷாவின் தனலட்சுமி கதாபாத்திரங்களை புகுத்தி ஜாலியான வீடியோ ஒன்றைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளனர் மீம் க்ரியேட்டர்கள்!
இந்த வீடியோ நடிகர் பிரகாஷ் ராஜின் கண்ணிலும் முன்னதாக பட்டுவிட, தன் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து ”இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் என் நாளை முழுமையாக்கி விட்டீர்கள்.. செல்லம்ஸ் ஐ லவ் யூ” என த்ரிஷாவை டேக் செய்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
😂😂😂 @prakashraaj https://t.co/Et7LWsbjIn
— Kundavai (@trishtrashers) September 18, 20 22
இந்நிலையில், இந்த வீடியோவுக்கு நடிகை த்ரிஷாவும் முன்னதாக ரியாக்ட் செய்து, வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் சிரிப்பு எமோஜிக்களுடன் பகிர்ந்துள்ளார்.
த்ரிஷாவின் இந்த ரியாக்ஷன் கில்லி பட ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
த்ரிஷாவும் நடிகர் பிரகாஷ் ராஜூம் அப்பா - மகளாக நடித்து உணர்ச்சிவயப்பட வைத்த ’அபியும் நானும்’ படத்தை, ஏற்கெனவே கில்லியுடன் ஒப்பிட்டு பல ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் பறக்கும்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தின் அப்பா சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ் நடித்துள்ள நிலையில், இதையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கமெண்ட் செக்ஷனில் ஜாலியாகக் களமாடி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

