PS-1 Trailer: கொஞ்சம் நேரம் காத்திருங்க! பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் ரிலீஸ் டைம் அறிவிப்பு!
PS 1 Trailer Launch: பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெயலர் வெளியாகும் நேரத்தை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி நடைபெற்றது.
View this post on Instagram
இதனிடையே பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தமிழில் நடிகர் கமல்ஹாசன், இந்தியில் அனில் கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, கன்னடத்தில் ஜெயந்த் கைகினி, மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் ஆகியோர் படத்திற்கான முன்னுரை குறித்த உரையை பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் நிகழ்ச்சியில் படத்தில் இடம் பெற்ற நடிகர்,நடிகைகள் தவிர்ந்து நடிகர்கள் நாசர், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த்,நிழல்கள் ரவி, இயக்குநர் மிஷ்கின், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், அதிதி ராவ், உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
View this post on Instagram
இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் இரவு 9 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.