டைவர்ஸ் ஆன பெண்கள் தான் டார்கட்?.. மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி தெரியாத ரகசியம்.. பிரபலம் தந்த ஷாக்
மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் திரை பிரபலங்களின் திருமணம் முதல் பட விழாக்களுக்கு இவரது சமையல் டிஸ் தான் ஸ்பெஷல். மாதம்பட்டி ரங்கராஜ் என்றால் தெரியாதவர்கள் எவரும் இல்லை.
ரஜினி, கமல், விஜய், அஜித் வரை அனைவரும் இவரது உணவின் சுவைக்கு அடிமை. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்ல்டாவை சில நாடட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை கிரிஸில்டா தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பயில்வான் ரங்கநாதன் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 மகன்கள் இருக்கின்றனர். இதுபோன்ற சூழலில் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருக்கு ஜாய் கிரிஸில்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி லிவிங் உறவில் இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். பொறியியல் படிப்பை முடித்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது தந்தையிடம் சமையல் தொழிலை கற்றுக்கொண்டார்.
நான் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே சொன்னேன். ரங்கராஜை பொறுத்தவரை டைவர்ஸ் ஆன பெண்களுக்குத்தான் வலை வீசுவார். ஏற்கனவே மூன்று பெண்களுடன் லிவிங்கில் இருந்த அவர், ஜாய் கிரிஸில்டாவை இப்போது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் கட்டாயத்தின் பேரில் நடந்திருப்பது பால் தெரிகிறது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என தெரிவித்திருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளித்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பதே பலரது கேள்வியாக உள்ளது.





















