72 கோடி ரூபாய் சொத்து.. உயில் எழுதி வைத்த ரசிகை.. நோ சொன்ன லியோ பட நடிகர்
ரசிகை எழுதி வைத்த 72 கோடி ரூபாய் சொத்தை வாங்காமல் திருப்பிக் கொடுத்த நடிகர் குறித்த செய்தி வைரலாகி வருகிறது.

திரை பிரபலங்கள் மீது ரசிகர்கள் அளவுக்கடந்த அன்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடிகர் மீதான பேரன்பால் கைகளில் அவர்களது பெயர் அல்லது முகங்களை டாட்டூவாக வரைந்து வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதேபான்று பிறந்தநாள், பட ரிலீஸின் போது நடிகரின் வீட்டில் காத்திருந்து வாழ்த்து சொல்வது போன்ற நிகழ்வுகளும் தற்போது சகஜமாகிவிட்டது.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது கொண்டுள்ள பேரன்பினால் அவரது ரசிகை ஒருவர் இறப்பதற்கு முன் செய்த நெகிழ்ச்சி சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 62 வயது நிறைந்த நிஷா பாட்டீல் என்பவர் தனது சொத்து முழுவதையும் சஞ்சய் தத்திற்கு எழுதி கொடுத்துள்ளார். முதலில் இதுதொடர்பான செய்திகள் பொய்யானது என்றும், வதந்தி என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து நடிகர் சஞ்சய் தத்தும் பதில் ஏதும் கூறாமல் மெளனம் காத்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்த கர்லி டேல்ஸ் என்பவரிடம் அளித்த நேர்காணலில் ரசிகை ஒருவர் உங்களுக்காக ரூ.72 கோடி சொத்தை விட்டுச்சென்றது உண்மையா என கேட்டார். அதற்கு சற்றும் தாமதிக்காமல், சிரித்தபடியே உண்மைதான் என சஞ்சய் தத் தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டில் நிஷா பாட்டீல் என்ற பெண் ஒருவர் சஞ்சய் தத்தை சந்தித்து தனது ரூ.72 கோடி சொத்தை வழங்குவதாக தெரிவித்ததும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை பார்த்து கண்ணீர் வந்து விட்டது.
அவர் ஒரு மோசமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் அவரது சொத்துக்கள் அனைத்தையும் எனக்கு வழங்குமாறு வங்கியில் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார். ஆனால், நான் அந்த சொத்தை அவர்களது குடும்பத்தினரிடமே வழங்கி விட்டேன் என சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். அவரது செயலை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





















