Pattathu Arasan: வெற்றிலை தோட்ட பேக்ட்ராப்.. கபடிதான் களம்.. பட்டத்து அரசனாக ராஜ்கிரண்.. - இயக்குநர் சற்குணம் பேட்டி!
லைகா நிறுவனத்தின் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் ராஜ்கிரண் மற்றும் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படம் நவம்பர் 25 வெளியாகிறது
லைகா நிறுவனத்தின் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் ராஜ்கிரண் மற்றும் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பட்டத்து அரசன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார் களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ள சற்குணம். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 25ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லரும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மசாலா திரைப்படம் :
படம் பற்றிய இயக்குநர் சற்குணம், “ தஞ்சை மாவட்டம் ஆம்லாப்பட்டு என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா அப்பா,பேரன்,மாமன், மச்சான் என ஒரு குடும்பமே கபடி விளையாடுவது பற்றி கேள்விப்பட்டேன். அது என்னை பாதித்தது. உடனே நேரடியாக சென்று அவர்களிடம் பேசி அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன். இருப்பினும் அவர்கள் சொன்ன விஷயம் ஒரு படம் எடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என்பதால் அதனுடன் என்னுடைய கற்பனை கதையை சேர்த்து திரைக்கதையை உருவாக்கினேன்.
அதேபோல் தஞ்சை பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி. அவரைப் பற்றி அந்த பகுதியில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த பெயரை இந்த பட்டத்து அரசன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்துள்ளேன். இதுகுறித்து ராஜ்கிரனிடம் கூறிய போது அவர் மகிழ்ச்சி அடைந்தார். அதேபோல் மற்ற வீரர்களின் பெயர்களும் தமிழகத்தில் கபடி விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களின் பெயரை வைக்குமாறு கூறினார். நானும் அப்படி வைத்தால் அது அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என நினைத்து எல்லா கதாபாத்திரங்களுக்கும் பிரபல கபடி விளையாட்டு வீரர்களின் பெயரையே சூட்டியுள்ளேன்.
இதன் கதைக்களம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நடப்பது போன்று அமைத்துள்ளேன். அங்கு வெற்றிலை தோட்டம் வைத்துள்ள குடும்பம் தான் ராஜ்கிரனின் குடும்பம். தார பங்கு என்ற விளக்கத்தின் அடிப்படையில், ராஜ்கிரனின் இரண்டு தாரங்களுக்கும் தனது சொத்தை சமமாக பிரித்துக்கொடுக்க, இதனால் முதல் தாரத்தின் மகனுக்கும் இரண்டாம் தாரத்தின் மகனுக்கும் விரோதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஊர் பிரச்னை ஏற்பட்டு ஒரு குடும்பம் ஊரை எதிர்த்து கபடி விளையாடுவதற்கு தள்ளப்படுகிறது இதுதான் அந்த படத்தின் மைய கரு.
The #PattathuArasan 👑 official trailer is coming to your screens at 6⃣PM today!
— Lyca Productions (@LycaProductions) November 18, 2022
Movie releasing on Nov 25th 📽️ at theatres near you!@SarkunamDir 🎬 @Atharvaamurali #Rajkiran @AshikaRanganath @realradikaa ✨ @GhibranOfficial 🎶 @thinkmusicindia 💿 @LycaProductions 🪙 pic.twitter.com/cGPSJUNvq2
இதில் கபடி விளையாட்டு என்பது குடும்ப சண்டைகளுக்கிடையே ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. முழுவதுமே கபடி விளையாட்டாக இருக்காது. இதில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் சேர்ந்து ஒரு கமர்சியல் பேக்காக வந்துள்ளது. அவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக அமையும். மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் ஆஷிகா ரங்கநாத் முதல் முறையாக தமிழில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூட்டிங் முடிந்த பிறகு ஜிப்ரான் இசை கோர்ப்பு பணிகளை மேற்கொண்டார். கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் எனக்கு சிறப்பான இசையை தர வேண்டும் என்ற காரணத்தினால் அந்த நேரத்தை எடுத்துக் கொண்டதாக கூறினார். பின்னணி இசை உடன் படத்தை பார்த்தபோது வேற லெவலில் இருந்தது எந்தவித கரக்சனும் நான் ஜிப்ரானிடம் சொல்லவில்லை.
#CelebrityClicks
— Kosda Tamil (@KosdaTamil) November 18, 2022
அதர்வா, ராஜ்கிரண் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் பட்டத்து அரசன் பட Exclusive Stills....!!! #Atharvaa #PattathuArasan #CinemaUpdate #Cinema #KosdaTamilNews #KosdaTamil #உண்மையும்நன்மையும் #kosda pic.twitter.com/jVoiWoxAXM
அதேபோல் வெற்றிலை தோட்டம் என்பது இதுவரை சினிமாவில் அவ்வளவாக காட்டப்படாத பேக்ட்ராப். அதை அழகாக தனது கேமராவில் லோகநாதன் படம் பிடித்துள்ளார். அதேபோல் லைக்கா நிறுவனம் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து தேவையான பட்ஜெட்டையும் கொடுத்து இந்த படத்தை ஒரு பிரமாண்ட படமாக உருவாக்கி தந்துள்ளனர். பட்டத்து அரசன் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.” என்றார்.