Pathu Thala Stills: 'என்ன ரத்தங்களா.. ஹாப்பியா.?' ராக்கி பாய்க்கு சவால் விடும் சிம்பு..!
கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த ’மஃப்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
![Pathu Thala Stills: 'என்ன ரத்தங்களா.. ஹாப்பியா.?' ராக்கி பாய்க்கு சவால் விடும் சிம்பு..! Pathu Thala Movie Stills Photos Out Check Out Simbu Mass Look New Stills Pathu Thala Stills: 'என்ன ரத்தங்களா.. ஹாப்பியா.?' ராக்கி பாய்க்கு சவால் விடும் சிம்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/14d76691615a65f4291a49dac1f1e6881677071290323574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனமீர்த்த இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘பத்து தல’
கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த ’மஃப்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் கௌதம் கார்த்திக், கலையரசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் 'நம்ம சத்தம்’ எனும் பாடல் முன்னதாக நடிகர் சிம்புவின் பிறந்த நாளான பிப்.03ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
வரும் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் சிம்பு கதாபாத்திரத்தின் ஸ்டில்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சிம்பு நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான மாநாடு மற்றும் சென்ற ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று சிம்புவின் நடிப்பு நல்ல பாராட்டுகளைக் குவித்தது.
இந்நிலையில், பத்து தல படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வைரலாகியுள்ளது.
மேலும் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் ஆகியோரது கதாபாத்திரங்களின் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிம்புவின் போட்டோக்கள் வெளியாகியுள்ள நிலையில், சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ”என்ன ரத்தங்களா ஹாப்பியா, நீங்க இல்லாம நான் இல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
பத்து தல படத்தில் ஏஜிஆர் எனும் கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். முன்னதாக பத்து தல படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், கர்நாடகா, தமிழ்நாட்டில் காரைக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)