மேலும் அறிய

Ullozhukku Trailer: ஊர்வசி - பார்வதி நடிப்புக்குத் தீனி.. சஸ்பென்ஸ் த்ரில்லர்.. பாராட்டு பெறும் உள்ளொழுக்கு ட்ரெய்லர்!

பார்வதி திருவோத்து மற்றும் ஊர்வசி நடித்துள்ள உள்ளொழுக்கு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உள்ளொழுக்கு

கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான டாக்குமண்டரி புனைவு Curry & Cyanide. ஒட்டுமொத்த கேரள மாநிலத்தையே உலுக்கிய ஜாலி ஜோசஃபின் பிரபலமான வழக்கை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் உருவானது. இந்தத் தொடரை இயக்கியதன் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தார் கிறிஸ்டோ டோமி. தற்போது அவர் இயக்கியுள்ள படம் உள்ளொழுக்கு. பார்வதி திருவோத்து மற்றும் ஊர்வசி இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மஞ்சும்மெல் பாய்ஸ் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன்  21ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த ஜூன் 10 ஆம் தேதி இப்படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. 

உள்ளொழுக்கு டிரைலர்

கேரள மாநிலம் முழுவதும் மழை பெய்து வெள்ளம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் தான் இறந்துபோன தாம்ஸ் குட்டி என்பவரின் உடல் அவர் வீட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. தாமஸ் குட்டியின் மனைவியாக பார்வதி திருவோத்துவும் அம்மாவாக ஊர்வசியும் நடித்துள்ளார்கள். தாமஸ் குட்டியின் உடலை தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்கிறார் ஊர்வசி. ஆனால் அதற்கு வெள்ள நீர் வடியும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். இறந்த தாமஸ் குட்டியின் உடல் இந்த வீட்டில் இருக்கும் அதே நேரத்தில் மருமகளான பார்வதிக்கும் மாமியார் ஊர்வசிக்கும் இடையில் பல்வேறு உண்மைகள் வெளிவருகின்றன.

தனது மகனின் குழந்தையை சுமக்கும் பார்வதி அவனுடன் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்தாரா என்கிற உண்மையில் தொடங்கி, தனது காதலன் உடன் சேருவதற்கான தன் மகனை பார்வதி கொன்றிருப்பார் என்கிற அளவுக்கு செல்கிறது ஊர்வசியின் சந்தேகம். இரண்டு பெண்களை மையமாக வைத்து நடக்கும் இந்தக் கதையில் சமரசப் புள்ளி என்பது என்ன என்பது இப்படத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் என்பது இந்த படத்தின் கேள்வியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

பாராட்டுக்களைப் பெறும் ஊர்வசி பார்வதி நடிப்பு

இவ்வளவு ஆழமான ஒரு கதைக்கு ஏற்ற வகையில் இரண்டு நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பொதுவாக ஊர்வசி காமெடி காட்சிகளில் அதிகம் பாராட்டப்பட்டாலும், எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்கடித்துவிடக் கூடியவர். சமீபத்தில் வெளியான ஜே பேபி படம் வரை எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பை நாம் பார்த்து வருகிறோம். அதே நேரம் மறுபக்கத்தில் மலையாளத் திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் பார்வதி திருவோத்து. கதைத் தேர்விலும் சரி நடிப்பிலும் சரி பார்வதி படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த இரண்டு நடிகைகளுக்கு இடையிலான ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் கலந்த படமாக உள்ளொழுக்கு படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget