Parthiban On Facebook Hack | அரக்கர்களை வதம் செய்ய... Facebook ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக பார்த்திபன் ஆவேசம்..
இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.
சமூக வலைதளங்கள் இல்லாமல் இன்று பெரும்பாலானோர் இல்லை. அதிலும் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது நடவடிக்கைகளையும், அடுத்தகட்ட நகர்வுகளையும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் பரிமாறிக்கொள்கின்றனர். மேலும் வீடியோக்களும் பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்.
இந்நிலையில் பார்த்திபன் தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “haappppyy Sunday என் FB hack செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம், ஆனால்அறிவுக்கே பிறந்த சில sweet enemies Hack செய்கிறார்கள்.
Hhaappppyy Sunday
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 21, 2021
என் FB hack செய்யப்பட்டிருக்கிறது.
அறிவுள்ளவன் படமெடுக்கலாம்,அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம்,ஆனால்
அறிவுக்கே பிறந்த சில sweet enemies
Hack செய்கிறார்கள்.
அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை.அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள். pic.twitter.com/DkUfgjt3xy
அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை.அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே தோன்றிய அப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் வென்றது. தற்போது இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கை பார்த்திபன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகனாக அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது தவிர ‘இரவின் நிழல்’ என்ற படத்தையும் பார்த்திபன் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: யாருன்னே தெரியாத பெண் வீட்டுக்குள்ள வந்து, இப்படி பண்ணாங்க.. சைஃப் அலிகான் சொன்ன ஸ்வாரஸ்ய கதை!